தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை 134 கோடியாக உயர்வு!
ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகியோரின் புதிய இணைப்பால், மே மாதம் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 134.3 கோடியாக அதிகரித்துள்ளது.
புதுதில்லி: டிராய் தரவுகளின் அடிப்படையில், ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகியோரின் புதிய இணைப்பால், மே மாதம் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 134.3 கோடியாக அதிகரித்துள்ளது.
ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஏர்டெல் 29.8 லட்சம் புதிய சந்தாதாரர்களை இணைத்து முன்னிலை வகுக்கிறது. இதில் மொபைல் பிரிவில் 29.26 லட்சமும், தொலைபேசி இணைப்புகள் பிரிவில் 53,809 சந்தாதாரர்களும் அடங்குவர்.
இதனைத் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ 22.55 லட்சம் புதிய சந்தாதாரர்களை இணைத்துள்ளது. இதில் மொபைல் பிரிவில் 21.54 லட்சமும், தொலைபேசி பிரிவில் 1.01 லட்சம் வாடிக்கையாளர்கள் அடங்குவர்.
Advertisement
Advertisement
மே மாதம் இந்த இரண்டு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இணைந்து 52.36 லட்சம் புதிய சந்தாதாரர்களை இணைத்துள்ளனர்.
இந்தியாவில் மொத்த தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஏப்ரல் 2026 இறுதியில் இருந்த 133.75 கோடியிலிருந்து, மே 2026 இறுதியில் 134.31 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் மாதந்திர வளர்ச்சி விகிதம் 0.42 சதவீதமாக இருப்பதாக டிராயின் மே 2026-க்கான மாதந்திர சந்தாதாரர் தரவு அறிக்கை தெரிவிக்கிறது.
இதற்கிடையில், மே மாதம் வயர்லெஸ் இணைப்புகளின் எண்ணிக்கை, ஏப்ரலில் இருந்த 128.89 கோடியிலிருந்து 129.44 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த வயர்லெஸ் இணைப்புகளில் 114.58 கோடி நுகர்வோர் சிம் கார்டுகளுடன், 13.11 கோடி பேர் M2M கார்டுகளுடன் இருக்கும் நிலையில் 1.17 கோடி நுகர்வோர் நிலையான வயர்லெஸ் இணைப்புகளுடன் உள்ளனர்.
தரவுகளின் அடிப்படையில், பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை ஏப்ரலில் இருந்த 107.34 கோடியிலிருந்து 108 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் 52.96 கோடி சந்தாதாரர்களுடன் ரிலையன்ஸ் ஜியோ முன்னிலை வகுக்கிறது. இதனைத் தொடர்ந்து ஏர்டெல் 37.6 கோடி சந்தாதாரர்களுடனும், வோடபோன் 12.9 கோடி சந்தாதாரர்களுடனும், பிஎஸ்என்எல் 2.7 கோடி சந்தாதாரர்களுடன் உள்ளனர்.
Telecom subscriber base grew to 134.3 crore in May according to Trai data.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.