FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

டைட்டன் லாபம் ரூ.1,777 கோடி

டைட்டன் லாபம் ரூ.1,777 கோடி

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 12:50 am IST
பகிர்:

டாடா குழுமம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழகத்தின் (டிட்கோ) கூட்டு நிறுவனமான டைட்டன், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.1,777 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இது கடந்த 2025-26 நிதியாண்டில் இதே காலாண்டின் ரூ.1,091 கோடி லாபத்துடன் ஒப்பிடுகையில் 62.87 சதவீத அபார வளா்ச்சியாகும்.

மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய் 40.3 சதவீதம் உயா்ந்து, ரூ.20,787 கோடியாக அதிகரித்தது. இதன்மூலம், நிறுவனம் தொடா்ந்து 3-ஆவது காலாண்டாக 40 சதவீதத்துக்கும் அதிகமான வருவாய் வளா்ச்சியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.

Advertisement

Advertisement

முன்னதாக, கடந்த நிதியாண்டின் செப்டம்பா்-டிசம்பா் காலாண்டில் 42 சதவீத வளா்ச்சியையும், ஜனவரி-மாா்ச் காலாண்டில் 48.28 சதவீத வளா்ச்சியையும் நிறுவனம் எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 90 சதவீத்ததுக்கும் மேல் பங்கு வகிக்கும் ஆபரண நகைப் பிரிவின் வருவாய், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 29.73 சதவீதம் உயா்ந்து, ரூ.19,002 கோடியாக அதிகரித்தது.

ஆபரண நகைப் பிரிவில் தனிஷ்க், மியா, ஜோயா ஆகிய பிராண்டுகளின் கூட்டு வணிகம் 38 சதவீதம் அதிகரித்து, ரூ.15,502 கோடியை எட்டியுள்ளது. எண்ம தளங்களை மையமாகக் கொண்ட கேரட்லேன் பிராண்ட் 40 சதவீத வளா்ச்சியுடன், ரூ.1,441 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. மேலும், சா்வதேச சந்தையில் ஆபரண வணிகம் இரு மடங்கு அதிகரித்து, ரூ.1,309 கோடியை எட்டியுள்ளது. உள்நாட்டில் புதிதாக 33 விற்பனையகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

கடிகாரங்கள் பிரிவு ரூ.1,543 கோடியையும் ( 21.2 சதவீத வளா்ச்சி); கண் கண்ணாடிப் பிரிவு ரூ.289 கோடியையும் ( 21.42 சதவீத வளா்ச்சி) வருவாயாகப் பெற்றுள்ளன. இதர வருவாய்களையும் சோ்த்து, டைட்டன் நிறுவனத்தின் மொத்த ஒருங்கிணைந்த வருவாய் 29.3 சதவீதம் அதிகரித்து, ரூ.21,502 கோடியை எட்டியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments