வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்களை உருவாக்கும் சாட்ஜிபிடி!
வாட்ஸ்ஆப் செயலியில் பயனர்களே ஸ்டிக்கர்களை உருவாக்கும் வகையில் புதிய அம்சத்தை சாட்ஜிபிடி சேர்த்துள்ளது குறித்து...
வாட்ஸ்ஆப்பில் பேசிக்கொள்பவர்களின் உரையாடல்களை மேலும் சுவாரசியமாக்கும் வகையிலும் எளிமையாக்கும் வகையிலும் புதுப்புது ஸ்டிக்கர்களை சாட்ஜிபிடி உருவாக்கவுள்ளது.
பயனர்களே தங்களுக்கு விருப்பப்பட்ட உணர்வுகளைப் பரிமாறும்படி ஸ்டிக்கர்களை உருவாக்கிக்கொள்ளலாம். அதனை நேரடியாக வாட்ஸ்ஆப் உரையாடலின்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.
உலகம் முழுக்கவும் வாட்ஸ்ஆப் பயனர்கள் நிறைந்துள்ளனர். பலர் வாட்ஸ்ஆப் மூலம் தங்கள் உணர்வுகளை மறுமுனையில் இருப்பவருடன் பகிர்ந்துகொள்கின்றனர்.
Advertisement
Advertisement
வாட்ஸ்ஆப் உரையாடலில் ஸ்டிக்கர்கள் அனுப்புவது மிகுந்த சுவாரசியமானது. தற்போது பயனர்கள் தங்கள் விருப்பப்படி ஸ்டிக்கர்களை உருவாக்கி மறுமுனையில் இருப்பவருடன் பகிர்ந்துகொள்ளலாம்.
இதற்காக புதிய கருவியை சாட்ஜிபிடியில் ஓபன்ஏஐ நிறுவனம் சேர்த்துள்ளது. மேம்படுத்தப்பட்ட சாட்ஜிபிடி செயலியில் புதிய ஸ்டிக்கர்களை உருவாக்கும் இந்த அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
அதனைப் பயன்படுத்தி ஸ்டிக்கர்களை உருவாக்கிய பிறகு டெக்ஸ் செய்யும் செயலிகளை (சாட் ஆப்) சேர்த்துக்கொள்ள வேண்டும். அதில் வாட்ஸ்ஆப் செயலியை இணைத்துவிட்டு, அதில் ஸ்டிக்கர்களை டவுன்லோட் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது டெக்ஸ்ட் மெசேஜ் செய்யும்போது இந்த ஸ்டிக்கர்களை அனுப்பி உரையாடலை மேலும் சுவாரசியமானதாக்கலாம்.
ஆரம்பத்தில் இந்த அம்சத்தை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கொடுக்கவுள்ளதாகவும், பிறகு விரிவுபடுத்தவுள்ளதாகவும் ஓபன் ஏஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த ஆய்வு நிலையே தற்போது இருப்பதால், எப்போதிருந்து இந்த அம்சத்தை பயன்படுத்த முடியுன் என்பது உறுதியாகத் தெரியவில்லை.
ChatGPT may soon create WhatsApp stickers and add them directly to chats
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.