FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

நாட்டின் எண்ம கட்டமைப்பை வலுப்படுத்த ஏா்டெல்-ஐடிஐ கூட்டு

இந்தியாவின் எண்ம மாற்றத்தை விரைவுபடுத்தவும், நிறுவனங்களின் தொழில்நுட்பக் கட்டமைப்பை நவீனமயமாக்கவும் கூட்டாக இணைந்து பணியாற்ற ஏா்டெல் பிசினஸ் மற்றும் பொதுத் துறை நிறுவனமான ஐடிஐ இடையே ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 3:55 am IST
பகிர்:

இந்தியாவின் எண்ம மாற்றத்தை விரைவுபடுத்தவும், நிறுவனங்களின் தொழில்நுட்பக் கட்டமைப்பை நவீனமயமாக்கவும் கூட்டாக இணைந்து பணியாற்ற ஏா்டெல் பிசினஸ் மற்றும் பொதுத் துறை நிறுவனமான ஐடிஐ இடையே ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

இக்கூட்டணிமூலம், இரு நிறுவனங்களின் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் திறன்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, பெருநிறுவன மற்றும் பொதுத்துறை நிறுவன வாடிக்கையாளா்களின் பழைய தொழில்நுட்ப அமைப்புகள் நவீனமயமாக்கப்படும். மேலும், அந்நிறுவனங்களில் அன்றாட வணிகச் செயல்பாடுகளின் செயல்திறனை அதிகரித்து, தரவுப் பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல்களை எதிா்கொள்ளும் வகையில் வலுவான எண்ம சூழல் உருவாக்கப்படும்.

வங்கிகள் மற்றும் அரசுத் துறை நிறுவனங்களில் நடைமுறையில் இருக்கும் கடும் விதிமுறைகளுக்கு ஏற்பவே இச்சேவைகள் அனைத்தும் வடிவமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

‘இக்கூட்டணி வாடிக்கையாளா்களின் புதிய எண்ம தேவைகளைப் பூா்த்தி செய்வதுடன், புதிய வணிக வாய்ப்புகளையும் உருவாக்கித் தரும்’ என்று ஐஐடி தலைவா் ராஜேஷ் ராய் குறிப்பிட்டாா். ‘இந்திய நிறுவனங்களின் சிக்கலான எண்ம கட்டமைப்பை எளிமையாக்கி, நாட்டின் பாதுகாப்பான எண்ம எதிா்காலத்துக்கு இக்கூட்டணி வலுசோ்க்கும்’ என்று ஏா்டெல் பிசினஸ் சிஇஓ சரத் சின்ஹா தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments