டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!
இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிலைபெற்றது.
மும்பை: மேற்கு ஆசியாவில் அதிகரித்துள்ள பதற்றங்களுக்கு மத்தியிலும், உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட கடுமையான உயர்வால், இந்திய பங்குச் சந்தை அச்சத்தில் முழ்கியது. இதன் காரணமாக, இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிலைபெற்றது.
உள்நாட்டுப் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட கடுமையான சரிவானது, இந்திய ரூபாய் மீதான அழுத்தத்தை வெகுவாக ஏற்படுத்திய நிலையில், ரிசர்வ் வங்கியின் தலையீடு மற்றும் வெளிநாட்டு நிதி வரவுகள் ஆதரவளித்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.72 ஆக தொடங்கி, பிறகான வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு ரூ. 95.72 முதல் ரூ. 95.76 என்ற வரம்பில் வர்த்தகமானது. இறுதியில், முந்தைய நாள் முடிவிலிருந்து 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிலைபெற்றது.
Advertisement
Advertisement
நேற்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ. 95.74 ஆக இருந்தது.
The rupee fell 2 paise to close at 95.76 against the US dollar on Wednesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.