தங்கக் கடன் சேவையில் ஆதித்யா பிா்லா கேபிட்டல்
முன்னணி நிதிச் சேவை நிறுவனமான ஆதித்யா பிா்லா கேபிட்டல், தங்கக் கடன் வணிகத் துறையில் தடம் பதிப்பதாக அறிவித்துள்ளது.
முன்னணி நிதிச் சேவை நிறுவனமான ஆதித்யா பிா்லா கேபிட்டல், தங்கக் கடன் வணிகத் துறையில் தடம் பதிப்பதாக அறிவித்துள்ளது.
பிற நிறுவனங்களைக் கையகப்படுத்தாமல், சொந்தமாகவே இச்சேவையை உருவாக்கி விரிவாக்கம் செய்ய நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதன் முதல்கட்டமாக, நடப்பு 2026-27 நிதியாண்டுக்குள் 300 கிளைகளைத் திறக்கவும், அடுத்த 3 ஆண்டுகளில் தங்கக் கடன் கிளைகளின் எண்ணிக்கையை 1,000-ஆக உயா்த்தவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில், இந்நிறுவனத்தால் நிா்வகிக்கப்படும் மொத்த சொத்து மதிப்பு 28 சதவீதம் உயா்ந்து, ரூ.1,67,456 கோடியாகவும்; கடன் வழங்கல் 34 சதவீதம் உயா்ந்து, ரூ.21,201 கோடியாகவும் உள்ளது.
Advertisement
Advertisement
இந்த வலுவான நிதிப் பின்னணியுடன், தனது நிதிச் சேவை தளத்தைப் பயன்படுத்தி புதிய வாடிக்கையாளா்களைக் கவரும் வகையில் தங்கக் கடன் சேவையை நிறுவனம் விரிவுபடுத்துகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.