டிசம்பருக்குள் 5ஜி சேவைக்கு மாறும் பி.எஸ்.என்.எல்.!
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் இந்த ஆண்டு டிசம்பருக்குள் 5 ஜி சேவையை எட்டும் இலக்கு நிர்ணயித்துள்ளது குறித்து...
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் இந்த ஆண்டு டிசம்பருக்குள் 5ஜி சேவையை எட்டும் இலக்கை முடிவு செய்துள்ளது.
தற்போதைய 4ஜி கட்டமைப்பு ஏற்கெனவே 5ஜிக்கு மாற தயாராக இருப்பதால், எளிதில் மாற முடியும் என பிஎஸ்என்எல் கேரள பிரிவு தலைமை பொது மேலாளர் சாஜி குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர்,
Advertisement
Advertisement
உள்நாட்டு தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்ட எங்கள் 5ஜி நெட்வொர்க்கின் சோதனையை நாங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டோம். 5ஜி-க்கு மாறுவதற்கு மென்பொருள் மேம்படுத்தல்கள் மட்டுமே தேவைப்படும்.
5ஜி தொலைத்தொடர்பு இணைய சேவையைத் தொடங்குவதற்கான காலக்கெடுவாக இந்த ஆண்டு டிசம்பர் இறுதிவரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது கேரளத்தில் 5ஜிக்கு எளிமையாக மாறக்கூடிய வகையில் 7,200 4ஜி மொபைல் டவர்கள் உள்ளனதாகவும், 4ஜி கட்டமைப்பை வலுப்படுத்த புதிதாக அமைக்கப்பட்டுவரும் 26,300 டவர்களால் மாநிலம் மேலும் பயன் அடையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
BSNL to switch to 5G service by December
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.