FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இணைய வசதி இல்லாமலே பணப்பரிமாற்றம்! போன்பேவில் புதிய வசதி

இணைய வசதி இல்லாமலே பணப்பரிமாற்றம் செய்யும் வகையில் போன்பேவில் புதிய வசதி

போன்பே - IANS
பகிர்:

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகளில் முன்னணியில் உள்ள போன்பேசி, விரைவில் போன்பே 123பே என்ற புதிய வசதியை ஏற்படுத்தவிருப்பதாகவும் பயனர்கள் இனி இணைய வசதி இல்லாமலேயே பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும் என அறிவித்துள்ளது.

நாட்டில் முதல் முறையாக, பணப்பரிவர்த்தனைக்கான செயலி நிறுவனம் ஒன்று இந்த சேவையை அறிமுகப்படுத்துகிறது.

குறைந்த அளவிலான 2G இணைப்பு வசதி கொண்ட பகுதிகளிலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் நடப்பதை உறுதி செய்யும் வகையிலும், தனித்துவ தொழில்நுட்பக் கட்டமைப்பு மற்றும் குறுஞ்செய்தி அடிப்படையிலான தொழில்நுட்பத்திலும் இது செயல்படவிருக்கிறது.

Advertisement

Advertisement

இதற்காக நோக்கியா, எச்எம்டி, லாவா உள்ளிட்ட பல்வேறு செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் போன்பே ஒருங்கிணைந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

முதல்முறை இந்த சேவையை ஆக்டிவ் செய்ய குரல் மூலம் உதவி செய்தால், செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உதவி எண்கள் போன்றவற்றையும் உருவாக்கவிருக்கிறது.

இதில் இந்திய மொழிகளில் 12 மொழிகளில் மக்களுக்கு இதனை எப்படி ஆக்டிச் செய்ய வேண்டும் என்று படிப்படியாக விளக்கும். ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களும் இந்த சேவையை பெறும் வகையில் விரிவுபடுத்தவிருக்கிறது.

summary

Money transfers without internet access! New feature on PhonePe.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments