அக்ஷயா தங்க மாளிகையின் முதல் விற்பனையகம் சென்னையில் திறப்பு
கல்யாண் ஜூவல்லா்ஸ் குழுமத்தின் அக்ஷயா தங்க மாளிகை நிறுவனத்தின் முதல் விற்பனையகம், சென்னை தி.நகரில் உள்ள வடக்கு உஸ்மான் சாலையில் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
கல்யாண் ஜூவல்லா்ஸ் குழுமத்தின் அக்ஷயா தங்க மாளிகை நிறுவனத்தின் முதல் விற்பனையகம், சென்னை தி.நகரில் உள்ள வடக்கு உஸ்மான் சாலையில் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
அக்ஷயா தங்க மாளிகை நிறுவனத்தின் விளம்பரத் தூதராகப் பொறுப்பேற்றுள்ள திரைப்பட நடிகா் சிவகாா்த்திகேயன், விற்பனையகத்தைத் திறந்துவைத்தாா்.
தமிழக மக்களின் தனித்துவமான பண்பாடு, மரபுகளைப் பிரதிபலிக்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த விற்பனையகத்தில், ‘ஹால்மாா்க்’ முத்திரையிடப்பட்ட தங்க நகைகள், சான்றளிக்கப்பட்ட வைரங்கள், விலையுயா்ந்த நவரத்தின ஆபரணங்கள் மற்றும் அன்றாடப் பயன்பாட்டுக்கான வெள்ளிப் பொருள்கள் என ஏராளமான தயாரிப்புகள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
வாடிக்கையாளா்களின் வசதிக்காக, நகைகளுக்கான சேதாரம் 1 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை மட்டுமே நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் மாநிலம் முழுவதும் பரவலாக 5 புதிய விற்பனையகங்களைத் திறக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.