FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஆக. 16 முதல் கர்நாடக மக்கள் மாளிகை திறப்பு... என்னென்ன தடை?

கர்நாடக மக்கள் மாளிகை திறப்பு பற்றி..

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 1:08 pm IST
கர்நாடக மக்கள் மாளிகை - TNIE
பகிர்:

கர்நாடக மக்கள் மாளிகை (லோக் பவன்) ஆகஸ்ட் 16 முதல் 18 வரை பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்திருக்கும் என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

இதுதொடர்பாக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டின் சிறப்புச் செயலாளர் ஆர். பிரபு சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

லோக் பவனில் குறிப்பிட்ட பகுதிகளைப் பார்வையிட மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் வருகையின்போது கொடுக்கப்பட்ட வழிகாட்டுதல்களைக் கட்டாயம் பின்பற்று வேண்டும்.

Advertisement

Advertisement

80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கர்நாடக லோக் பவன் ஆகஸ்ட் 16, 17இ 18 ஆகிய தேதிகளில் மாலை 5:30 மணி முதல் 7:30 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்திருக்கும்.

ஒவ்வொரு பார்வையாளரும் ஆதார் அட்டை போன்ற செல்லுபடியாகும் அரசு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். நுழைவு வாயிலில் சரிபார்ப்புக்காகப் பாதுகாப்புப் பணியாளர்களிடம் அதைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பார்வையாளர்கள் லோக் பவன் வளாகத்திற்குள் நுழைவதற்கு முன் கட்டாயப் பாதுகாப்புச் சோதனை மற்றும் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அத்துடன் பாதுகாப்புப் பணியாளர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.

பார்வையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். வளாகத்திற்குள் அமைதி, ஒழுக்கம் மற்றும் கண்ணியத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தனியார் டாக்ஸி வாகனங்கள் லோக் பவன் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படாது. இது தவிர, இருசக்கர வாகனங்கள், உணவுப் பொருள்கள், பான், குட்கா, புகையிலைப் பொருள்கள், சிகரெட்டுகள் மற்றும் மதுபானம் போன்ற சில பொருள்கள் லோக் பவனுக்குள் கொண்டு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புகைப்பட கேமராக்கள், விடியோ கேமராக்கள், மடிக்கணினிகள், பிற மின்னணு மற்றும் மின்சார சாதனங்கள், கூர்மையான பொருள்கள், உலோகப் பொருள்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீப்பெட்டிகள், லைட்டர்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் ஆகியவை தடைசெய்யப்பட்ட பிற பொருள்களில் அடங்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments