FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஐபிஓ மூலம் நிதி திரட்ட திட்டமிட்டுள்ள ஏபிஎச் ஹெல்த்கேர்!

ஏபிஎச் ஹெல்த்கேர் நிறுவனத்தின் ரூ. 34.98 கோடி மதிப்பிலான ஐபிஓ முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்க நாளை முதல் அனுமதி.

23 ஆகஸ்ட் 2026, 9:30 pm IST
ஏபிஎச் ஹெல்த்கேர்
பகிர்:

புதுதில்லி: பல்துறை மருத்துவச் சேவைகளை வழங்கும் ஏபிஎச் ஹெல்த்கேர் நிறுவனத்தின் ரூ. 34.98 கோடி மதிப்பிலான ஐபிஓ-வை நாளை (திங்கள்கிழமை) முதல் முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐபிஓ வெளியீடு ஆகஸ்ட் 27 வரை நடைமுறையில் இருக்கும் என்ற நிலையில், நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்படும் தற்காலிகத் தேதி செப்டம்பர் 1 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனிடையில், நிறுவனத்தின் பங்குகள் நிஃடி-யில் பட்டியலிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐபிஓ வெளியீடு மூலம் 34.29 லட்சம் வரையிலான பங்குகள் வெளியிடப்படவுள்ளன. பங்கு ஒன்றுக்கு ரூ. 96 முதல் ரூ. 102 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதன் மூலம் கிடைக்கும் நிகர வருவாய் மூலம் ரூ. 17 கோடியை நிறுவனத்தின் கடனைப் பகுதியளவோ அல்லது முழுமையாகவோ திருப்பிச் செலுத்தவும், ரூ. 5 கோடியைச் செயல்பாட்டு மூலதனத் தேவைகளுக்காகவும் பயன்படுத்த ஏபிஎச் ஹெல்த்கேர் திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள தொகையை மற்ற நிறுவனங்களை கையகப்படுத்துதல் செய்வதற்கும், அதன் மூலம் வளர்ச்சியை அடைவதற்கும் பயன்படுத்தப்படும்.

summary

ABH Healthcare's Rs 34.98 crore initial public offering will open on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments