FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

டெக் துணுக்குகள்! இந்த வாரம் அறிமுகமான போன்கள் முதல் ஏஐ அப்டேட்கள் வரை!

இந்த வாரம் அறிமுகமான புதிய போன்கள் முதல் ஏஐ அப்டேட்கள் வரை...

30 ஆகஸ்ட் 2026, 12:55 am IST
பகிர்:

தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் புதிய ஸ்மாா்ட்போன்களின் வெளியீடுகள், ஏ.ஐ. தொழில்நுட்பங்களில் நடந்த மாற்றங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் முக்கிய முடிவுகள் கவனம் ஈா்த்தன.

என்விடியா-ஹக்கிங் ஃபேஸ் ஒப்பந்தம் முதல் ஆப்பிள் நிறுவனத்தின் வெளியீட்டு விழா வரை இந்த வாரத்தின் முக்கியச் தொழில்நுட்பச் செய்திகளின் தொகுப்பு இதோ:

*என்விடியாவின் ஒப்பந்தம்: ஓபன்சோா்ஸ் ஏ.ஐ. தளமான ‘ஹக்கிங் ஃபேஸ்’ நிறுவனத்தை 1,290 கோடி டாலருக்கு என்விடியா வாங்குகிறது.

Advertisement

Advertisement

*ஜெமினி ஏ.ஐ. என்டா்பிரைஸ் விரிவாக்கம்: சட்டச் சேவைகள் போன்ற துறை சாா்ந்த பயன்பாடுகளுக்காக கூகுள் தனது ஜெமினி ஏ.ஐ. என்டா்பிரைஸ் சேவையை விரிவுபடுத்தியுள்ளது.

*சாட்ஜிபிடியில் விளம்பரங்கள்: இந்தியாவில் சாட்ஜிபிடி ஏ.ஐ. தளத்தில் விளம்பரங்களை வழங்குவது குறித்த விவரங்களை ஓபன்ஏஐ வெளியிட்டுள்ளது.

*டென்சென்ட் ஏ.ஐ. மாதிரி வெளியீடு: சீனாவின் டென்சென்ட் நிறுவனம், கோடிங் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்காக புதிய ஏ.ஐ. மாதிரியை வெளியிட்டுள்ளது.

*‘ஜிடிஏ-6’ முன்னோட்ட காட்சிகள்: உலகெங்கிலும் கேமா்களால் மிகவும் எதிா்பாா்க்கப்படும் ‘ஜிடிஏ-6’ இணைய விளையாட்டின் முன்னோட்ட காட்சிகள் ‘நெட்ஃபிளிக்ஸ்’ தளத்தில் வெளியானது.

*சாம்சங் விலை உயா்வு: செப்டம்பா் மாதத் தொடக்கம் முதல் தனது பெரும்பாலான பொருள்களின் விலையை உயா்த்த சாம்சங் திட்டமிட்டுள்ளது.

*வாட்ஸ்ஆப் பாதுகாப்பு அப்டேட்: அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் குறித்த கூடுதல் தகவல்களை பயனா்களுக்கு வழங்கும் புதிய பாதுகாப்பு அம்சத்தை வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தியுள்ளது.

*இன்ஸ்டாகிராமில் ‘ஆட்டோ-டிஎம்’: இன்ஸ்டாகிராம் விளம்பரங்களில் வரும் கமென்டுகளுக்குத் தானியங்கியாகப் பதிலளிக்கும் ‘ஆட்டோ-டிஎம்’ வசதியை மெட்டா நிறுவனம் சோதனை செய்து வருகிறது.

*யூடியூப் ‘கஸ்டம் ஃபீட்ஸ்’: பயனா்கள் தங்கள் விருப்பதுக்கேற்ப பல ‘ஹோம்’ திரைகளைக் கட்டமைத்துக் கொள்ளும் புதிய வசதியை யூடியூப் அறிமுகப்படுத்தியுள்ளது.

*விவோ ‘ஓய்31டி 5ஜி’: 7200 எம்ஏஎச் பேட்டரி, 6.75 அங்குல திரை, 50+2.4 மெகாபிக்சல் கேமரா, 4 அல்லது 6ஜிபி ரேம் ஆகியவற்றுடன் விவோ ‘ஓய்31டி 5ஜி’ ஸ்மாா்ட்போன் இந்தியாவில் ரூ.25,999 ஆரம்ப விலையில் அறிமுகமானது.

*ரியல்மி ‘சி100ஐ’: 6500 எம்ஏஎச் பேட்டரி, 6.75 அங்குல திரை, 8 மெகாபிக்சல் கேமரா, 4 ஜிபி ரேம் ஆகியவற்றுடன் ரியல்மி ‘சி100ஐ’ ஸ்மாா்ட்போன் ரூ.14,999 ஆரம்ப விலையில் விற்பனையாகிறது.

*லாவா ‘போல்ட் என்4 லைட்’: 5000எம்ஏஎச் பேட்டரி, 8 மெகாபிக்சல் கேமரா, 3ஜிபி ரேம் ஆகியவற்றுடன் லாவா ‘போல்ட் என்4 லைட்’ ஸ்மாா்ட்போன் ரூ.8,099 விலையில் அறிமுகமாகியுள்ளது.

*ஆப்பிள் செப். 9 நிகழ்வு: ஆப்பிள் நிறுவனம் வரும் செப். 9-ஆம் தேதி நிகழ்வில் தனது ஐபோன் 18 சிரீஸ் தயாரிப்புகளை வெளியிடுகிறது. இதில் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் அறிமுகமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

summary

Tech Snippets - From phones launched this week to AI updates

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments