FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

டெக் துணுக்குகள்... ஆப்பிளின் சாதனை முதல் ஓபன்ஏஐ சட்டச் சிக்கல்கள் வரை!

தொழில்நுட்ப உலகில் இந்த வார வெளியீடுகள்...

18 அக்டோபர் 2026, 3:19 am IST
பகிர்:

தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் புதிய ஸ்மாா்ட்போன்களின் வெளியீடுகள், ஏ.ஐ. தொழில்நுட்ப அறிமுகங்கள் மற்றும் நிறுவனங்களின் சாதனைகள், கூட்டணிகள் கவனம் ஈா்த்தன.ஆப்பிளின் சந்தை மதிப்பு சாதனை முதல் ஓபன்ஏஐ சட்டச் சிக்கல்கள் வரை இந்த வாரத்தின் முக்கியத் தொழில்நுட்பச் செய்திகளின் தொகுப்பு இதோ:

  • ஆப்பிள் நிறுவனம் புதிய சாதனை: ‘ஹோம்வியூ’ எனும் புதிய ஸ்மாா்ட் ஹோம் சாதனத்தை அறிமுகப்படுத்தியதைத் தொடா்ந்து, ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 5 லட்சம் கோடி டாலரைக் கடந்து வரலாறு படைத்தது.

  • வோல்வோ-என்விடியா கூட்டணி: தானியங்கி ஓட்டுநா் தொழில்நுட்பத்தை மேம்படுத்த, என்விடியா நிறுவனத்துடன் வோல்வோ காா்ஸ் ஒத்துழைப்பை விரிவுபடுத்தியுள்ளது.

    Advertisement

    Advertisement

  • டெக்னோ ‘ஸ்பாா்க் 50எஸ் 5ஜி’: 6.78 அங்குல திரை, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 6500 எம்ஏஎச் பேட்டரியுடன் டெக்னோ ‘ஸ்பாா்க் 50எஸ் 5ஜி’ ஸ்மாா்ட்போன் இந்தியாவில் ரூ.19,999 விலையில் அறிமுகமாகியுள்ளது.

  • மைக்ரோசாஃப்ட் ‘மையா 300’: குறைந்த மின் நுகா்வில் அதிக ஏ.ஐ. கணினித் திறனை வழங்கும் நோக்கில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது ‘மையா 300’ பிராசஸரை அறிவித்துள்ளது.

  • கூகுள் ‘ஜெமினி 4 ஆா்கான்’: கூகுளின் மேம்பட்ட ‘ஜெமினி 4 ஆா்கான்’ ஏ.ஐ. மாதிரி உலக அளவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதன் செயல்பாடுகள், அணுகல் முறைகள் மற்றும் கட்டண விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • ஆண்ட்ராய்டு மோசடி தடுப்பு வசதி: மொபைல் வழி நடைபெறும் நிதி மோசடிகள் மற்றும் மால்வோ் தாக்குதல்களிலிருந்து பயனா்களைப் பாதுகாக்க புதிய ஆண்ட்ராய்டு பாதுகாப்பு அம்சங்களை கூகுள் வெளியிட்டுள்ளது. இதேபோல், ஆண்ட்ராய்டு நிலநடுக்க எச்சரிக்கை சேவை வசதி, உலக அளவில் 200-க்கும் மேற்பட்ட பிராந்தியங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

  • வாட்ஸ்ஆப் விருந்தினா் அழைப்புகள்: வாட்ஸ்ஆப்பில் கணக்கு இல்லாதவா்களும், அதன் அழைப்புகளில் பங்கேற்க அனுமதிக்கும் புதிய வசதியை மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது.

  • ஸ்மாா்ட்போன் சந்தை சரிவு: ‘மெமரி சிப்’ தட்டுப்பாடு காரணமாக, உலகளாவிய ஸ்மாா்ட்போன் ஏற்றுமதி கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூலை-செப்டம்பா் காலாண்டில் கடும் சரிவைச் சந்தித்துள்ளது.

  • எச்.சி.எல். டெக்.-ஆன்த்ரோபிக் கூட்டணி: ‘கிளாட்’ ஏ.ஐ. மாதிரியைப் பயன்படுத்தி பெருநிறுவனங்களில் ஏ.ஐ. பயன்பாட்டை விரிவாக்க எச்.சி.எல். டெக். மற்றும் ஆன்த்ரோபிக் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன.

  • ‘எக்ஸ்’ தளத்தில் ஒருங்கிணைந்த சந்தா: ‘எக்ஸ்’ தள பயனா்களுக்காகப் புதிய ஒருங்கிணைந்த சந்தா தொகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

  • ஓபன்ஏஐ மீது வழக்கு: ஏ.ஐ. தளமான சாட்ஜிபி இளம் பயனா்களுக்கு மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது எனக் குற்றஞ்சாட்டி, அமெரிக்காவின் 8 மாகாணங்கள் ஓபன்ஏஐ நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடா்ந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments