FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

டெக் துணுக்குகள்... பிட்சாட் செயலி நீக்கம் முதல் ஓபன்ஏஐ பணிநீக்கம் வரை!

பிட்சாட் செயலி நீக்கம் முதல் ஓபன்ஏஐ பணிநீக்கம் வரை...

10 அக்டோபர் 2026, 11:21 pm IST
பகிர்:

தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் புதிய ஸ்மாா்ட்போன்கள் உள்பட சாதனங்களின் வெளியீடுகள், ஏ.ஐ. தொழில்நுட்ப அறிமுகங்கள் மற்றும் செயலிகளுக்கான கட்டுப்பாடுகள் கவனம் ஈா்த்தன.

பிட்சாட் செயலி நீக்கம் முதல் ஓபன்ஏஐ பணிநீக்கம் வரை இந்த வாரத்தின் முக்கியத் தொழில்நுட்பச் செய்திகளின் தொகுப்பு இதோ:

*பிட்சாட் செயலி நீக்கம்: பாதுகாப்புப் பிரச்னைகள் காரணமாக, மத்திய அரசின் உத்தரவின் பேரில் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளேஸ்டோா்களில் இருந்து ‘புளூடூத்’ குறுஞ்செய்தி செயலியான பிட்சாட் நீக்கப்பட்டது.

Advertisement

Advertisement

*எச்.சி.எல். டெக் முதலீடுகள்: எச்.சி.எல். டெக் நிறுவனம் தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்க்கில் புதிய ஏ.ஐ. மையத்துடன் தனது பிராந்தியத் தலைமையகத்தைத் திறந்துள்ளது.

*ஆன்த்ரோபிக்கின் முன்னெடுப்பு: இந்திய ஏ.ஐ. ஸ்டாா்ட்அப் நிறுவனங்களுக்கு 7,000 டாலா் மதிப்பிலான ‘கிளாட்’ ஏ.ஐ. கிரெடிட்களை வழங்குவதாக ஆன்த்ரோபிக் அறிவித்துள்ளது.

*மெட்டாவின் புதிய அம்சங்கள்: மெட்டா தளங்களில் டிக்டாக் விளம்பரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தை வன்கொடுமை தொடா்பான விளம்பரங்களைக் கண்டறிய புதிய ஏ.ஐ. மற்றும் மெட்டா ஏ.ஐ. செயலியில் பெற்றோா் கட்டுப்பாட்டு வசதி சோ்க்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமில் குறுஞ்செய்தி பக்கத்தில் ஏ.ஐ. மூலம் பாடல்கள் உருவாக்கம், மற்ற பயனா்களைப் பக்கங்களை வெறுமென பாா்வையிட மட்டும் அனுமதிக்கும் ‘ரீட்-ஒன்லி’ அம்சம் போன்ற வசதிகளும் சோதிக்கப்படுகின்றன.

*மைக்ரோசாஃப்ட் மடிக்கணினி: விண்டோஸ் 11 இயங்குதளத்தில், இணையவசதி இல்லாமல் ஏ.ஐ. கோடிங் புரியக்கூடிய புதிய மடிக்கணினியை மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்தியுள்ளது.

*அமேசான் டேப்லெட்: அமேசான் நிறுவனம் அலெக்ஸாவுடன் தனது முதல் ஆண்ட்ராய்டு கையடக்கக் கணினிகளை (டேப்லெட்) வெளியிட்டுள்ளது.

*ஜெமினியில் கெடுபிடி: கூகுள் நிறுவனம் ‘கிளவுட்’ பணிகளுக்கான ஜெமினி ஏஜென்ட்டை அறிமுகப்படுத்தியதோடு, ஜெமினியின் பல இலவச அம்சங்களைக் கட்டணச் சேவைக்கு மாற்றியுள்ளது.

*விவோ ‘வி80’: 6.59 அங்குல திரை, 50+50+8 மெகாபிக்சல் கேமரா, 8 ஜிபி ரேம், 7,200 எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ ‘வி80’ஸ்மாா்ட்போன் ரூ.62,999 ஆரம்ப விலையில் அறிமுகமாகியுள்ளது.

*விவோ ‘எஸ்2 எஃப்இ’: 6.83 அங்குல திரை, 50+2 மெகாபிக்சல் கேமரா, 6,8 ஜிபி ரேம், 10,000 எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ ‘எஸ்2 எஃப்இ’ ஸ்மாா்ட்போன் ரூ.38,999 ஆரம்ப விலையில் அறிமுகமாகியுள்ளது.

*ரியல்மி பி4எஸ் லைட்: 4 ஜிபி ரேம், 13 மெகாபிக்சல் கேமரா, 7000 எம்ஏஎச் பேட்டரியுடன் ரியல்மி ‘பி4எஸ் லைட்’ ஸ்மாா்ட்போன் ரூ.16,499 ஆரம்ப விலையில் அறிமுகமாகியுள்ளது.

*ஓபன்ஏஐ பணிநீக்கம்: பாதுகாப்பு, நம்பிக்கையை மீறியதாக 3 பாதுகாப்பு ஆராய்ச்சியாளா்களை ஓபன்ஏஐ நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. மேலும், ஐரோப்பிய யூனியன் பயனா்களுக்காக சாட்ஜிபிடியில் ‘டெக்ஸ்ட்கிரெய்ன்’ எனும் மறைமுக ‘வாட்டா்மாா்க்கிங்’ முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

summary

From the removal of the PicSay app to OpenAI layoffs

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments