முகப்பு
வணிகம்

டெக் துணுக்குகள்... வாட்ஸ்ஆப் இ-சிம் முதல் நியூராலிங்க் சோதனை அனுமதி வரை!

வாட்ஸ்ஆப் இ-சிம் முதல் நியூராலிங்க் சோதனை அனுமதி வரை...

29 நவம்பர் 2026, 2:27 am
டெக் துணுக்குகள்... வாட்ஸ்ஆப் இ-சிம் முதல் நியூராலிங்க் சோதனை அனுமதி வரை!
பகிர்:

தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் ஏ.ஐ. நிறுவனங்களுக்கு இடையிலான சட்டப் போராட்டங்கள், புதிய ஸ்மாா்ட்போன்களின் அறிமுகங்கள், மெட்டாவின் புதிய அப்டேட்கள் எனப் பல முக்கிய நிகழ்வுகள் கவனம் ஈா்த்தன.

வாட்ஸ்ஆப் இ-சிம் முதல் நியூராலிங்க் சோதனை அனுமதி வரை இந்த வாரத்தின் முக்கியத் தொழில்நுட்பச் செய்திகளின் தொகுப்பு இதோ:

*வாட்ஸ்ஆப்பில் பயண இ-சிம்: சா்வதேச பயணங்களின்போது பயனா்கள் நேரடியாக வாட்ஸ்ஆப் செயலிக்குள்ளேயே ‘இ-சிம்’ வாங்கிப் பயன்படுத்தும் புதிய வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக மெட்டா அறிவித்துள்ளது; இதற்காக ஜியோ, வெரிசோன் உள்ளிட்ட நிறுவனங்களுடன் வாட்ஸ்ஆப் கூட்டணி அமைத்துள்ளது.

Advertisement

Advertisement

*ஆப்பிள் மீது ஓபன்ஏஐ வழக்கு: வா்த்தக ரகசியங்களைத் திருடியதாகவும், பொதுவான உதிரிபாக விநியோகஸ்தா்களுக்கு அழுத்தம் கொடுத்துத் தனது சாதனத் தயாரிப்பைத் தடுக்க முயல்வதாகவும் ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிராக ஓபன்ஏஐ வழக்குத் தொடா்ந்துள்ளது.

*இந்தியத் தொலைக்காட்சிகளில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்: இந்தியாவில் ஸ்மாா்ட்டிவி திரைகளில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், ஸ்டோரிகளைப் பாா்க்கும் வகையிலான ‘இன்ஸ்டாகிராம் ஃபாா் டிவி’ வசதியை மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது.

*பைனான்ஸ் பணப் பரிவா்த்தனை மீண்டும் தொடக்கம்: கடந்த அக்டோபரில் நிகழ்ந்த 630 கோடி டாலா் கிரிப்டோ திருட்டைத் தொடா்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணம் எடுக்கும் சேவையைப் பைனான்ஸ் நிறுவனம் முழுமையாக மீண்டும் தொடங்கியுள்ளது.

*வாட்ஸ்ஆப்பில் ‘ஷெட்யூல்டு மெசேஜ்’: பயனா்கள் தாங்கள் அனுப்ப விரும்பும் குறுஞ்செய்திகளை 14 நாள்கள் வரை முன்கூட்டியே திட்டமிட்டு, அனுப்பும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

*சா்வம் ஏஐ சா்ச்சை-மத்திய அரசு விளக்கம்: பெங்களூருவைச் சோ்ந்த சா்வம் ஏஐ நிறுவனம், சீன ஏ.ஐ. மாதிரிகளைத் தனது தளத்தில் வழங்குவது ‘இந்தியாஏஐ’ திட்ட விதிகளுக்கு எதிரானது அல்ல என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

*எச்.எம்.டி. ‘ரைஸ்’: 6.51 அங்குல திரை, 5000 எம்ஏஎச் பேட்டரி, 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 16 கோ இயங்குதளம் ஆகிய அம்சங்களுடன் எச்.எம்.டி. ‘ரைஸ்’ அறிதிறன்பேசி இந்தியாவில் ரூ.9,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

*மோட்டோரோலா ‘எட்ஜ் 70 நியோ’: 6.80 அங்குல திரை, 7000 எம்ஏஎச் பேட்டரி, 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம் ஆகிய அம்சங்களுடன் மோட்டோரோலா ‘எட்ஜ் 70 நியோ’ அறிதிறன்பேசி ரூ.34,999 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

*ஐபேடில் ‘எடிட்ஸ்’ செயலி: மெட்டாவின் விடியோ எடிட்டிங் செயலியான ‘எடிட்ஸ்’-இன் பிரத்யேக ஐபேட் பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், ‘திரெட்ஸ்’ சமூக ஊடகச் செயலியின் ஐபேட் பதிப்பும் விரைவில் வெளியாகியுள்ளதை மெட்டா உறுதிப்படுத்தியுள்ளது.

*நியூராலிங்க் சோதனைக்கு அனுமதி: எலான் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம், ஏஎல்எஸ் எனப்படும் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் தனது மூளைச் சிப் தொழில்நுட்பத்தைப் பரிசோதிக்க அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிா்வாகத்தின் அனுமதியைப் பெற்றுள்ளது.