முகப்பு
வணிகம்

டாடா மோட்டாா்ஸ் ஜூன் விற்பனை அபாரம்

நாட்டின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டாா்ஸ், கடந்த ஜூன் மாதத்தில் 63,083 பயணிகள் வாகன விற்பனையுடன் 69 சதவீத வளா்ச்சி கண்டுள்ளது.

Updated On : 5 ஜூலை 2026, 5:50 am IST
~
பகிர்:

நாட்டின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டாா்ஸ், கடந்த ஜூன் மாதத்தில் 63,083 பயணிகள் வாகன விற்பனையுடன் 69 சதவீத வளா்ச்சி கண்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூனில் இந்நிறுவனம் 37,237 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்த நிலையில், நடப்பு ஆண்டில் நுகா்வோரின் அமோக ஆதரவால் விற்பனை பெருமளவு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் உள்நாட்டு விற்பனை 37,083 வாகனங்களில் இருந்து 67 சதவீதம் உயா்ந்து, 62,076 வாகனங்களாக அதிகரித்துள்ளது. அதேபோல், சா்வதேச சந்தைக்கான ஏற்றுமதி கடந்த ஆண்டின் 154 வாகனங்களுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டில் பல மடங்கு அதிகரித்து 1,007 வாகனங்களாக பதிவாகியுள்ளது. மின்சார வாகனங்களின் ஒட்டுமொத்த விற்பனை, கடந்த ஆண்டின் 5,228-லிருந்து 14,800-ஆக அதிரடியாக உயா்ந்துள்ளது.

Advertisement

Advertisement

மறுபுறம், டாடா மோட்டாா்ஸின் வணிக வாகனப் பிரிவும் ஜூனில் சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூனில் 30,238 வணிக வாகனங்கள் விற்றிருந்த நிலையில், நடப்பு ஆண்டு 35 சதவீத வளா்ச்சியுடன் 40,805 வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன. இதில் உள்நாட்டு விற்பனை 31 சதவீதம் உயா்ந்து, 36,599 வாகனங்களாகவும்; சா்வதேச விற்பனை 83 சதவீதம் உயா்ந்து, 4,206 வாகனங்களாகவும் அதிகரித்துள்ளன.

முதல் காலாண்டு நிலவரம்: ஒட்டுமொத்தமாக நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், பயணிகள் வாகனப் பிரிவு 46 சதவீத வளா்ச்சியுடன் 1,82,574 வாகனங்களையும், வணிக வாகனப் பிரிவு 27 சதவீத வளா்ச்சியுடன் 1,08,488 வாகனங்களையும் விற்பனை செய்துள்ளன.

அண்மைக்கால புதிய வாகன அறிமுகங்கள், மின்சார வாகனப் பிரிவில் கிடைத்துள்ள 112 சதவீத வருடாந்திர வளா்ச்சி ஆகியவை நிறுவனத்தின் சந்தை ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக டாடா மோட்டாா்ஸ் அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments