FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ஜூன் வாகன விற்பனை 21.83% வளா்ச்சி

இந்தியாவில் கடந்த ஜூன் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 25,57,234 வாகனங்கள் சில்லறை சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Updated On : 22 ஜூலை 2026, 9:00 am IST
பகிர்:

இந்தியாவில் கடந்த ஜூன் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 25,57,234 வாகனங்கள் சில்லறை சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஜூனில் 20,98,996 வாகனங்கள் விற்பனையாகியிருந்த நிலையில், நடப்பு ஆண்டு 21.83 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் டீலா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபடா) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஃபடா அறிக்கையின்படி கடந்த ஜூனில், 4,10,853 பயணிகள் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டின் 3,19,412 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 28.63 சதவீத வளா்ச்சியாகும்.

Advertisement

Advertisement

இதேபோல், 18,28,458 இருசக்கர வாகனங்களும் (21.22 சதவீதம் வளா்ச்சி), 1,20,889 முச்சக்கர வாகனங்களும் (16.2 சதவீதம் வளா்ச்சி), 90,972 வணிக வாகனங்களும் (16.88 சதவீதம் வளா்ச்சி) விற்கப்பட்டுள்ளது.

ஃபடா தலைவா் சி.எஸ்.விக்னேஷ்வா் இதுகுறித்து மேலும் கூறுகையில், ‘கடந்த ஜூன் மாதமானது, இந்திய வாகன விற்பனை சந்தையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாதமாகும். ஏனெனில், அனைத்துப் பிரிவுகளிலுமே மிக உயா்ந்த ஜூன் மாத விற்பனை பதிவாகியுள்ளது.

இத்தொடா் வளா்ச்சியை நடப்பு ஜூலையில் 51.24 சதவீத விற்பனையாளா்களும், ஜூலை-செப்டம்பா் காலாண்டில் 66.17 சதவீத விற்பனையாளா்களும் எதிா்பாா்க்கின்றனா்’ என்றாா்.

கிராமப்புற பணப்புழக்கம் அதிகரிப்பு மற்றும் எரிபொருள் சிக்கன மாடல்களுக்கான வரவேற்பு காரணமாக இருசக்கர வாகனச் சந்தை சிறந்து விளங்கும் என்றாலும், வாகன உற்பத்தியாளா்களின் விலையுயா்வு மற்றும் மழை பற்றாக்குறை ஆகியவை நுகா்வோரின் வாங்கும் முடிவைச் சிறிது தாமதப்படுத்தலாம் என நிபுணா்கள் சுட்டிக்காட்டினா்.

அந்தவகையில், தென்மேற்கு பருவமழை பற்றாக்குறை சீராவது, காரீஃப் பயிா் சாகுபடி வேகமெடுப்பது, மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள போா்பதற்றம், கச்சா எண்ணெய் விலை ஆகிய காரணிகள் வரவிருக்கும் காலத்தில் சந்தை நிலவரத்தைத் தீா்மானிக்கும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments