FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!

இன்றைய வர்த்தகத்தில், ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.32 ஆக நிறைவுபெற்றது.

Updated On : 10 ஜூலை 2026, 6:24 pm IST
இந்திய ரூபாய்
பகிர்:

மும்பை: மேற்கு ஆசியாவில் பதற்றங்கள் தீவிரமடைந்த நிலையில், டாலர் சற்று பலவீனமடைந்ததாலும், எண்ணெய் விலை குறைந்ததாலும், இன்றைய வர்த்தகத்தில், ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.32 ஆக நிறைவுபெற்றது.

அந்நிய முதலீட்டு வெளியேற்றம் மற்றும் மேற்கு ஆசியாவில் தொடரும் பதற்றம் உள்ளிட்டவையால், ரூபாயின் மீதான அழுத்தம் நிலவியது. அதே நேரத்தில், உள்நாட்டு பங்குச் சந்தையில் ஏற்பட்ட வலுவான தொடக்கம் ரூபாயிக்கு ஆதரவளித்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

ஒரு நாள் முன்னதாக நடந்த தாக்குதல்கள் உள்பட, மாறி மாறி நடந்த தாக்குதல்கள் போர் நிறுத்தத்திற்கு மீண்டும் மீண்டும் அச்சுறுத்தலாக அமைந்தன.

Advertisement

Advertisement

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.27 என்ற அளவில் தொடங்கி, பிறகு முந்தைய நாள் முடிவிலிருந்து 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.32 ஆக சரிந்தது.

நேற்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசுகள் உயர்ந்து ரூ. 95.47 ஆக இருந்தது.

summary

The rupee rose 15 paise to 95.32 against US dollar in early trade on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments