FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

நேற்று தங்கம் வாங்கியிருந்தால் வருத்தப்படுவீர்கள்! இன்றைய விலை நிலவரம் (ஜூலை 11)

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...

Updated On : 11 ஜூலை 2026, 10:18 am IST
கோப்புப் படம் - IANS
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வாரத்தின் இறுதி நாளான இன்று (ஜூலை 11, சனிக்கிழமை) சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.

இந்த வாரம் பெரும்பாலும் நான்கு நாள்களும் விலை குறைந்த நிலையில், இன்றும் விலை குறைந்திருக்கிறது. அதன்படி ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 11, சனி) சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,06,400-க்கும் கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,300-க்கும் விற்பனையாகிறது.

ஞாயிற்றுக்கிழமை விலை மாறாது என்பதால், பொதுவாக, சனிக்கிழமை விலை குறைந்தால் அது தங்க நகை வாங்குபவர்களுக்கு அனுகூலமாக இருக்கும். ஏனெனில் இரண்டு நாள்களுக்கு இந்த விலை நீடிக்கும் என்பதால்.

Advertisement

Advertisement

இந்த வாரம் தங்கம் விலையின் போக்கு..

இந்த வாரம் திங்கள்கிழமை வணிகம் தொடங்கியபோது, ஜூலை 6ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,08,480 ஆக இருந்தது. படிப்படியாக விலை குறைந்து வார இறுதியான இன்று ரூ.1,06,400 ஆக உள்ளது.

இந்த வாரம் பெரும்பாலும் மூன்று நாள்கள் விலை குறைந்த நிலையில், இன்றும் விலை குறைந்திருக்கிறது. அதன்படி ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 11, சனி) சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,06,400-க்கும் கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,300-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ. 240-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5000 குறைந்து ரூ. 2.40 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

summary

chennai gold and silver price today july 11

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments