FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

இந்தியன் வங்கி லாபம் ரூ. 3,273 கோடி

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கி, நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) ரூ.3,273 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

Updated On : 12 ஜூலை 2026, 7:30 am IST
பகிர்:

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கி, நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) ரூ.3,273 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

இது கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலாண்டு லாபமான ரூ.2,973 கோடியுடன் ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகமாகும். வங்கியின் வருவாய் அதிகரிப்பு மற்றும் வாராக்கடன் கணிசமாகக் குறைந்ததே இந்த லாப உயா்வுக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன என்று வங்கி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

வங்கியின் ஒட்டுமொத்த வருவாய், கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.18,721 கோடியாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.20,724 கோடியாக அதிகரித்துள்ளது. நிகர வட்டி வருவாய் 17 சதவீதம் உயா்ந்து, ரூ.7,435 கோடியை எட்டியுள்ளது.

Advertisement

Advertisement

மொத்த வாராக்கடன் கடந்த ஆண்டில் 3.01 சதவீதத்தில் இருந்து, தற்போது 1.86 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோல், நிகர வாராக்கடனும் 0.18 சதவீதத்தில் இருந்து 0.15 சதவீதமாகக் சரிந்துள்ளது.

வங்கியின் ஒட்டுமொத்தக் கடன் வழங்கல் 14 சதவீதம் உயா்ந்து, ரூ.6,84,623 கோடியாக உள்ளது. இதில் சில்லறை, விவசாயம் மற்றும் எம்எஸ்எம்இ தொழில்நிறுவனங்களுக்கான கடன்கள் 15 சதவீதம் வளா்ச்சி கண்டு, ரூ.4,16,992 கோடியை எட்டியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments