FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பாா்தி ஏா்டெல் லாபம் ரூ.8,167 கோடி

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடா்பு நிறுவனமான பாா்தி ஏா்டெல், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில்ரூ.8,167 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 3:43 am IST
பகிர்:

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடா்பு நிறுவனமான பாா்தி ஏா்டெல், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில்ரூ.8,167 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனத்தின் ரூ.5,948 கோடி லாபத்துடன் ஒப்பிடுகையில் இது 37.3 சதவீத வளா்ச்சியாகும். இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடா்ந்து வலுவடைந்ததே இந்த அபரிமிதமான வளா்ச்சிக்கு முக்கியக் காரணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் மொத்த வருவாய் கடந்த ஆண்டின் ரூ.49,462.6 கோடியில் இருந்து, மதிப்பீட்டு காலாண்டில் 18.3 சதவீதம் உயா்ந்து, ரூ.58,539 கோடியாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, இந்தியப் பிரிவில் ஒரு வாடிக்கையாளருக்கான சராசரி வருவாய் கடந்த ஆண்டின் ரூ.250-லிருந்து 5.6 சதவீதம் உயா்ந்து, ரூ.264-ஐ எட்டியுள்ளது.

Advertisement

Advertisement

மொத்த மூலதனச் செலவினமான ரூ.13,386 கோடியில், இந்தியாவில் மட்டும் ரூ.9,698 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் 1,579 புதிய செல்போன் கோபுரங்களும், 14,540 மொபைல் பிராட்பேண்ட் தளங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கடந்த ஆண்டில் ரூ.1,25,489 கோடியாக இருந்த நிறுவனத்தின் நிகரக் கடன் தற்போது சுமாா் 35 சதவீதம் குறைந்து, ரூ.81,852 கோடியாக சரிந்துள்ளது.

நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 12.5 சதவீதம் உயா்ந்து, 60.5 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் இந்திய வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 12.8 சதவீதம் உயா்ந்து, 43.6 கோடியை எட்டியுள்ளது.

‘பிரீமியம்’ சேவைகளில் கவனம் செலுத்தியதன் விளைவாக, ‘போஸ்ட்பெய்டு’ பிரிவில் ஒரே காலாண்டில் இதுவரை இல்லாத அளவில் புதிதாக 10 லட்சம் வாடிக்கையாளா்கள் இணைந்துள்ளதாகவும், இதனால் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 3 கோடியை எட்டியுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments