FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!

அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிலைபெற்றது.

Updated On : 13 ஜூலை 2026, 5:27 pm IST
கோப்புப் படம்
பகிர்:

மும்பை: ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்ததைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதன் தாக்கத்தால், இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிலைபெற்றது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் தொடங்கிய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல், கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்டவை மூலதனத்தை வெகுவாக வெளியேற்றியதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.72 என்ற நிலையில் தொடங்கிய, நாள் முழுவதும் ரூ. 95.58 முதல் ரூ. 95.86 வரையிலான வரம்பிற்குள் வர்த்தகமானது. இறுதியில், அதன் முந்தைய வர்த்தக நாள் முடிவை விட 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக வர்த்தகம் நிறைவடைந்தது.

Advertisement

Advertisement

முன்னதாக வெள்ளிக்கிழமையன்று, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிலைபெற்றிருந்தது.

summary

The rupee depreciated 27 paise to close at 95.65 against the US dollar on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments