டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 60 காசுகள் சரிந்து ரூ. 92.98 ஆக நிறைவு!
இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 60 காசுகள் சரிந்து ரூ. 92.98 ஆக நிலைபெற்றது.

மும்பை: கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உள்நாட்டுப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட கடும் சரிவு ஆகியவற்றின் மத்தியில், இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 60 காசுகள் சரிந்து ரூ. 92.98 ஆக நிலைபெற்றது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு ரூ. 92.44 ஆக வர்த்தகம் தொடங்கி, அதன் குறைந்தபட்ச அளவான ரூ. 93.01 ஐ தொட்டு, பிறகான வர்த்தகத்தில் ரூ. 92.98 ஆக நிலைபெற்றது. இது அதன் முந்தைய நாள் முடிவிலிருந்து 60 காசுகள் சரிவு.
நேற்று (வியாழக்கிழமை) டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 18 காசுகள் சரிந்து ரூ. 92.38 ஆக இருந்தது.
Advertisement
Advertisement
summary