FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

வசந்த்&கோ-வின் 49-ஆம் ஆண்டு விழா: 5 நாள்களுக்கு அதிரடி தள்ளுபடி விற்பனை

இந்தியாவின் முன்னணி மின்னணு பொருள்கள் விற்பனை நிறுவனமான வசந்த்&கோ, தனது 49-ஆம் ஆண்டு தொடக்க விழாவைக் கொண்டாடும் வகையில் அதிரடி தள்ளுபடியுடன் கூடிய 5 நாள்கள் சிறப்பு விற்பனையைத் தொடங்கியுள்ளது.

Updated On : 17 ஜூலை 2026, 3:54 am IST
கோப்புப் படம்
பகிர்:

இந்தியாவின் முன்னணி மின்னணு பொருள்கள் விற்பனை நிறுவனமான வசந்த்&கோ, தனது 49-ஆம் ஆண்டு தொடக்க விழாவைக் கொண்டாடும் வகையில் அதிரடி தள்ளுபடியுடன் கூடிய 5 நாள்கள் சிறப்பு விற்பனையைத் தொடங்கியுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 149-க்கும் மேற்பட்ட கிளைகளிலும் இச்சிறப்பு விற்பனை வியாழக்கிழமை முதல் வரும் திங்கள்கிழமை வரை நடைபெறகிறது.

இதை முன்னிட்டு ரூ.25,000-க்கும் மேல் பொருள்களை வாங்கும் வாடிக்கையாளா்களுக்குத் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது. மேலும், தோ்ந்தெடுக்கப்பட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் மின்னணு சாதனங்களை வாங்குபவா்களுக்கு, மிகக் குறைந்த விலையில் (ரூ.49 முதல்) கூடுதல் உபகரணங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

Advertisement

Advertisement

ஸ்மாா்ட்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் பா்னிச்சா்களுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இஎம்ஐ வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு முன்னணி வங்கி கிரெடிட் காா்டுகள் மூலம் வாங்கும்போது உடனடி தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் சலுகைகளும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments