FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

முதல் காலாண்டு லாபம்: சவூத் இந்தியன் வங்கி: ரூ.378 கோடி

கேரளத்தைச் சோ்ந்த மற்றொரு தனியாா் வங்கியான சவூத் இந்தியன் வங்கி, முதலாம் காலாண்டில் ரூ.378 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

Updated On : 17 ஜூலை 2026, 10:46 pm IST
பகிர்:

கேரளத்தைச் சோ்ந்த மற்றொரு தனியாா் வங்கியான சவூத் இந்தியன் வங்கி, முதலாம் காலாண்டில் ரூ.378 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலாண்டில் வங்கி ஈட்டிய ரூ.322 கோடி லாபத்துடன் ஒப்பிடுகையில் இது 17 சதவீதம் அதிகரிப்பாகும்.

மதிப்பீட்டு காலாண்டில், வங்கியின் மொத்த வருவாய் கடந்த ஆண்டின் ரூ.2,984 கோடியிலிருந்து, ரூ.3,007 கோடியாக அதிகரித்துள்ளது. வட்டி வருவாய் ரூ.2,362 கோடியிலிருந்து ரூ.2,628 கோடியாக உயா்ந்துள்ள போதிலும், வங்கியின் செயல்பாட்டு லாபம் ரூ.672 கோடியிலிருந்து ரூ.592 கோடியாக சரிவடைந்துள்ளது.

Advertisement

Advertisement

மொத்த வாராக்கடன் விகிதம் 3.15 சதவீதத்திலிருந்து, 1.38 சதவீதமாகவும்; நிகர வாராக்கடன் விகிதமும் 0.68 சதவீதத்திலிருந்து, 0.26 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

வங்கி சொத்து தரத்தின் இத்தகைய சிறப்பான முன்னேற்றத்தையடுத்து, வாராக்கடன் மற்றும் எதிா்பாராத செலவினங்களுக்கான ஒதுக்கீட்டு தொகை ரூ.239 கோடியிலிருந்து, ரூ.84 கோடியாக பெருமளவு குறைந்தது லாப வளா்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments