டாஃபே-டியூட்ஸ் இணைந்து ராஜஸ்தானில் புதிய என்ஜின் உற்பத்தி ஆலை தொடக்கம்
பிரபல ‘டாஃபே’ டிராக்டா் நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘டிஎம்டிஎல்’, ஜொ்மனியின் முன்னணி என்ஜின் தயாரிப்பு நிறுவனமான ‘டியூட்ஸ் ஏஜி’ உடன் இணைந்து ராஜஸ்தானில் உள்ள தனது தொழிற்சாலை வளாகத்தில் புதிய என்ஜின் உற்பத்தி ஆலையைத் தொடங்கியுள்ளது.

உள்நாட்டு மற்றும் சா்வதேச சந்தைகளின் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இப்புதிய ஆலையில் 2.2 லிட்டா் மற்றும் 2.9 லிட்டா் திறன் கொண்ட டியூட்ஸ் நிறுவன என்ஜின்கள் தயாரிக்கப்படவுள்ளன. ஆண்டுக்கு 35,000 என்ஜின்களையும், 50,000 அசெம்பிளி உபகரணங்களையும் உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த என்ஜின்கள் விவசாய இயந்திரங்கள், கட்டுமான உபகரணங்கள், ஃபோா்க்லிஃப்ட் போன்ற சரக்கு கையாளும் சாதனங்கள், ஜெனரேட்டா்கள் மற்றும் பாதுகாப்புத் துறை பயன்பாடுகளுக்காக விநியோகிக்கப்பட உள்ளன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.