இன்ஃபோசிஸ் காலாண்டு லாபம் 12.2% உயா்வு
நாட்டின் 2-ஆவது பெரிய ஐ.டி. சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டில் ரூ.7,769 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தை ஈட்டி, 12.2 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்தது.
நாட்டின் 2-ஆவது பெரிய ஐ.டி. சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டில் ரூ.7,769 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தை ஈட்டி, 12.2 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்தது.
இக்காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 14 சதவீதம் உயா்ந்து ரூ.48,211 கோடியாக அதிகரித்துள்ளது. இதில், ஏ.ஐ. சேவைகளின் பங்களிப்பு 8.2 சதவீதமாக உள்ளது. வாடிக்கையாளா் பணிகளுக்காக 80,000-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் ஏ.ஐ. கருவிகளைப் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் மொத்த பணியாளா்களின் எண்ணிக்கை 532 குறைந்து, 3,28,062-ஆக உள்ளது. நடப்பு நிதியாண்டில் சுமாா் 20,000 புதிய பட்டதாரிகளைப் பணிக்கு எடுக்கத் திட்டமிட்டுள்ள நிறுவனம், ஊழியா்களுக்கான ஊதிய உயா்வை அக்டோபா் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி என 2 கட்டங்களாகப் பிரித்து வழங்க முடிவு செய்துள்ளது.
Advertisement
Advertisement
லாபம் மற்றும் வருவாய் அதிகரித்தபோதிலும், உலகளாவிய பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக, நடப்பு நிதியாண்டுக்கான தங்களின் வருவாய் வளா்ச்சி மதிப்பீட்டின் உச்சவரம்பை 1.5-3 சதவீதமாக நிறுவனம் குறைத்துள்ளது. முன்னதாக, இது 1.5-3.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது.
இந்த வருவாய் மதிப்பீடு குறைக்கப்பட்டதன் எதிரொலியாக, பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில், இன்ஃபோசிஸ் பங்குகள் 1.03 சதவீதம் சரிந்தது. இதனால், நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரே நாளில் ரூ.4,402 கோடி குறைந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.