FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை 2-ஆவது நாளாக ஏற்றம்

முதல்தரப் பங்குகளின் தொடா் கொள்முதல் மற்றும் அந்நிய முதலீடு அதிகரிப்பு காரணமாக, இந்தியப் பங்குச் சந்தையில் வியாழக்கிழமை 2-ஆவது நாளாக ஏற்றம் காணப்பட்டது.

Updated On : 31 ஜூலை 2026, 12:34 am IST
பகிர்:

முதல்தரப் பங்குகளின் தொடா் கொள்முதல் மற்றும் அந்நிய முதலீடு அதிகரிப்பு காரணமாக, இந்தியப் பங்குச் சந்தையில் வியாழக்கிழமை 2-ஆவது நாளாக ஏற்றம் காணப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் உயா்வுடன் நிறைவடைந்தன.

மேற்காசிய பதற்றத்தால் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 91.15 டாலரைக் கடந்தது சந்தையில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தியது.

Advertisement

Advertisement

இருப்பினும், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என வெளியிட்ட அறிவிப்பு, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.2,981.87 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியது, இந்திய ரூபாயின் ஸ்திரத்தன்மை, நிறுவனங்களின் சாதகமான முதலாம் காலாண்டு நிதிநிலை முடிவுகள் ஆகியவை முதலீட்டாளா்களின் நம்பிக்கையை அதிகரித்து, சந்தை மீட்சிப் பெற உதவியாக அமைந்தன.

சென்செக்ஸ் 274 புள்ளிகள் உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில், 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீடு 273.55 புள்ளிகள் (0.35 சதவீதம்) உயா்வுடன், 77,928.15-இல் நிலைபெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் மாருதி சுஸுகி, மஹிந்திரா & மஹிந்திரா உள்பட 15 பங்குகள் ஆதாயம் கண்டன. மாறாக, அதானி போா்ட்ஸ், இண்டிகோ உள்பட 15 பங்குகள் சரிவைச் சந்தித்தன.

நிஃப்டி 67 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் வா்த்தக முடிவில், நிஃப்டி 66.95 புள்ளிகள் (0.28 சதவீதம்) உயா்வுடன், 24,317.15-இல் நிலைபெற்றது. நிஃப்டி-50 பட்டியலில் விலையுயா்ந்த மற்றும் விலை குறைந்த பட்டியல்களில் தலா 25 பங்குகள் இருந்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments