தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! (ஜூலை 31)
தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம் பற்றி...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ. 106,040-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது.
அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வரும் நிலையில், நாட்டில் தங்கத்தின் விலை தொடா்ந்து ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. இந்த வாரத் தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 106,960-க்கு விற்பனை செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
அதன்பிறகு, ஒரு சவரன் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை ரூ. 105,720-க்கும், புதன்கிழமை ரூ. 105,240-க்கும், வியாழக்கிழமை ரூ. 105,840 என விற்பனையாகி வந்தது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை மீண்டும் சவரனுக்கு ரூ. 200 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 13,255-க்கும், ஒரு சவரன் ரூ. 106,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 235-க்கும், ஒரு கிலோ ரூ. 2,35,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
Today july 31 Gold and Silver Rate in Chennai
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.