FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

கடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடு

Updated On : 4 ஜூன் 2026, 4:22 am IST
பகிர்:

கடந்த 2025-26 நிதியாண்டில், அதானி குழும நிறுவனங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீட்டை மேற்கொண்டுள்ளன.

இந்தியாவின் பெருநிறுவன வரலாற்றிலேயே ஒரே ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மூலதன முதலீடான இது, அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பை ரூ.7.85 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

இதில் சுமாா் 80 சதவீத முதலீடுகள் எரிசக்தி, போக்குவரத்து, தளவாடங்கள் உள்ளிட்ட நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுடன் தொடா்புடைய முக்கியத் துறைகளிலேயே முழுமையாக ஈா்க்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

அதானி குழுமத்தின் இப்புதிய முதலீட்டுச் சுழற்சியில் நவி மும்பை சா்வதேச விமான நிலையம், கங்கா விரைவுச்சாலை, தாமிர உருக்காலை மற்றும் 5.1 கிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் உள்ளிட்ட பல்வேறு பிரம்மாண்ட உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இப்புதிய சொத்துக்கள், நடப்பு நிதியாண்டு முதல் குழுமத்தின் ஒட்டுமொத்த வருவாய் மற்றும் பணப்புழக்கத்திற்கு இன்னும் கூடுதலான பங்களிப்பை வழங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த 2025-26 நிதியாண்டில், வட்டி, வரி மற்றும் தேய்மானத்துக்கு முந்தைய நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயும் ரூ.94,834 கோடி எனும் புதிய அளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments