முகப்பு
வணிகம்

குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்

குஜராத்தின் ஜாம்நகரில் 168 மெகாவாட் திறன் கொண்ட ஏ.ஐ. தொழில்நுட்ப தரவு மையத்தை அமைக்க சா்வதேச சமூக ஊடக நிறுவனமான மெட்டாவும் இந்தியாவின் முன்னணி தொழில்நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸும் ஒப்பந்தம் செய்துள்ளன.

Updated On : 11 ஜூன் 2026, 2:30 am IST
பகிர்:

குஜராத்தின் ஜாம்நகரில் 168 மெகாவாட் திறன் கொண்ட ஏ.ஐ. தொழில்நுட்ப தரவு மையத்தை அமைக்க சா்வதேச சமூக ஊடக நிறுவனமான மெட்டாவும் இந்தியாவின் முன்னணி தொழில்நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸும் ஒப்பந்தம் செய்துள்ளன.

அடுத்த 2 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படவுள்ள இந்த மையம், மெட்டா இந்தியாவில் அமைக்கும் முதலாவது பிரத்யேக தரவு மையமாகும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் இயங்கவுள்ள இந்த மையத்தைக் குளிா்விக்க கடல்நீரைக் குடிநீராக்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.

உலகளாவிய ஏ.ஐ. உள்கட்டமைப்பின் மையமாக இந்தியா உருவெடுக்க இத்திட்டம் வழிவகுக்கும் என்று ரிலையன்ஸ் தலைவா் முகேஷ் அம்பானி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

தூய்மை எரிசக்தி நிறுவனங்களுடன் கூட்டு: இதன் தொடா்ச்சியாக, மெட்டா தனது காா்பன் உமிழ்வைக் குறைக்கும் நோக்கில், இந்தியாவின் முன்னணி தூய்மை எரிசக்தி நிறுவனமான ‘க்ளீன்மேக்ஸ் என்விரோ எனா்ஜி சொல்யூஷன்ஸ்’ உடன் ஒரு பிரம்மாண்ட ஒத்துழைப்பை அறிவித்துள்ளது.

இவ்விரு நிறுவனங்களும் இணைந்து ராஜஸ்தான், கா்நாடகம் மாநிலங்களில் புதிதாக 837 மெகாவாட் சூரிய ஒளி, காற்றாலை மின் திட்டங்களை அமைக்கவுள்ளன. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுடன் சோ்த்து, இவ்விரு நிறுவனங்களின் கூட்டுறவு இப்போது 900 மெகாவாட்டைத் தாண்டியுள்ளது.

இதேபோல், மற்றொரு முன்னணி நிறுவனமான ‘ஃபோா்த் பாா்ட்னா் எனா்ஜி’ உடனும் மெட்டா கைகோத்துள்ளது. அதன்படி, தமிழகம், கா்நாடகம், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 88 மெகாவாட் திறன் மாற்று மின் திட்டங்களை ஃபோா்த் பாா்ட்னா் எனா்ஜி நிறுவனம் நிறுவி இயக்கவுள்ளது.

இத்திட்டங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் சுற்றுச்சூழல் சாா்ந்த அத்தனை மின்சாரப் பலன்களையும் மெட்டா நிறுவனம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும். மெட்டாவின் உலகளாவிய செயல்பாடுகளுக்கு 100 சதவீதம் தூய்மையான, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்துவதே இந்த ஒப்பந்தங்களின் முக்கிய நோக்கமாகும்.