8,000 mAh பேட்டரியுடன் ரியல்மி பி4ஆர் 5ஜி... வேறென்ன எதிர்பார்க்கலாம்?
8,000 mAh பேட்டரியுடன் தயாராகியுள்ள ரியல்மி பி4ஆர் 5ஜி மொபைலை பற்றி...
ரியல்மி நிறுவனத்திலிருந்து 8,000 mAh பேட்டரியுடன் ரியல்மி பி4ஆர் 5ஜி போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் விலை, சிறப்பம்சங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தியாவில் அதிகளவிலான விற்பனை வர்த்தகத்தைக் கொண்டுள்ள ரியல்மி மொபைல் புதிய போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன், மீடியாடெக் டைமென்சிட்டி 6300 சிப்செட் மற்றும் 144 ஹெட்ஸ் டிஸ்ப்ளேவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
Advertisement
Advertisement
6.80 அங்குல தொடுதிரை
மிடியாடெக் டைமென்சிட்டி 6300 புரோஸஸ்சர்
8 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா
50 மெகா பிக்சல் கொண்ட பின்பக்க கேமரா
பேட்டரி திறன் - 8000 mAh
4ஜிபி மற்றும் ஆறு ஜிபி உள்நினைவகம் தனித்தனியே
128 ஜிபி மற்றும் 256 ஜிபி நினைவகம் தனித்தனியே
ஆண்ட்ராய் 16
விலை
இந்தியாவில், ரியல்மி பி4ஆர் 5ஜி மாடலின் 4GB + 128GB மாடல் ரூ. 18999-க்கும், 6GB + 128GB மாடல் ரூ. 20,999-க்கும் மற்றும் 6GB + 256GB மாடல் ரூ. 22,999-க்குமாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த போன், டைட்டானியம் க்ளேர், சில்வர் க்ளேர், லேவண்டேர் க்ளேர் ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.
இந்த போன் ஜூன் 17 ஆம் தேதி முதல் ரியல்மி மற்றும் ஃபிளிப்கார்ட் தளங்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த போனில் மிக முக்கிய சிறப்பம்சமாக 8.8 மி.மீ. தடிமனில் மிகவும் மெலிதாகவும், 224 கிராம் எடையுடனும் தயாரிக்கப்பட்டுள்ளது.
Realme P4R 5G Launched in India With 8,000mAh Battery, MediaTek Dimensity 6300 SoC: Price, Features
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.