தொடர் சரிவில் இந்திய ரூபாய்: 1 டாலர் - ரூ. 96.52! 32 காசுகள் சரிவு!
இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 96.52 என்ற புதிய வரலாற்றுச் சரிவை எட்டியது.
மும்பை: கச்சா எண்ணெய் விலை உயர்வு, வலுவான டாலர் மற்றும் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் உள்ளிட்டவையால், இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 96.52 என்ற புதிய வரலாற்றுச் சரிவை எட்டியது.
இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 96.47 என்ற வரலாற்றுச் சரிவைச் எட்டியதையடுத்து, 2026ஆம் ஆண்டில் ஆசியாவிலேயே மிக மோசமான செயல்பாட்டைக் கொண்ட நாணயமாக ரூபாய் மாறியது. இந்த மாதத்தில் மட்டும் ரூபாயின் மதிப்பு 1.5 சதவீதமும், இந்த ஆண்டை பெறுத்தவரை இதுவரை 7 சதவீதத்திற்கும் அதிகமாகவும் சரிந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் 'ஹோர்முஸ் நீரிணை' முடக்கம் உள்ளிட்டவையால், ரூபாயின் மதிப்பு தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகும் நிலையே இருப்பதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 96.38 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கியது. பிறகான வர்த்தகத்தில், மேலும் சரிவடைந்து ரூ. 96.60 என்ற வரலாற்றுச் சரிவை எட்டியது. வர்த்தக இறுதியில், அதன் முந்தைய நாள் வர்த்தக முடிவை விட 32 காசுகள் சரிந்து ரூ. 96.52 என்ற நிலையில் வர்த்தகம் நிறைவடைந்தது.
நேற்று (திங்கள்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 96.20 என்ற வரலாற்றுச் சரிவில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
The rupee slipped to a record low of 96.60 against the U.S. dollar before settling at 96.52 on Tuesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.