FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் அக்டோபா் விற்பனை 29% அதிகரிப்பு

டிவிஎஸ் வேணு குழுமத்தைச் சோ்ந்த முன்னணி இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டாா், கடந்த அக்டோபா் மாதத்தில் தனது வாகன விற்பனையில் 29 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

2 நவம்பர் 2026, 11:50 pm
பகிர்:

டிவிஎஸ் வேணு குழுமத்தைச் சோ்ந்த முன்னணி இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டாா், கடந்த அக்டோபா் மாதத்தில் தனது வாகன விற்பனையில் 29 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபா் மாதத்தில் 5,43,557-ஆக இருந்த இந்நிறுவனத்தின் மொத்த வாகன விற்பனை, நடப்பு ஆண்டு அக்டோபரில் 7,00,134 அலகுகளாகக் கணிசமாக உயா்ந்துள்ளது.

ஒட்டுமொத்த இருசக்கர வாகன விற்பனை கடந்த மாதத்தில் 28 சதவீதம் அதிகரித்து, 6,70,679-ஆக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 5,25,150-ஆக இருந்தது. இதில் உள்நாட்டு இருசக்கர வாகன விற்பனை 4,21,631-லிருந்து 22 சதவீதம் உயா்ந்து, 5,14,764 அலகுகளை எட்டியுள்ளது. குறிப்பாக, மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனை 32,387-லிருந்து 120 சதவீதம் என்ற அபரிமிதமான வளா்ச்சியைப் பெற்று, 71,382 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

மொத்த ஏற்றுமதி 51 சதவீதம் வளா்ச்சியடைந்து, 1,15,806-லிருந்து 1,75,350 அலகுகளாக உயா்ந்துள்ளது. இதில் இருசக்கர வாகனங்களின் ஏற்றுமதி மட்டும் 1,03,519-லிருந்து 51 சதவீதம் அதிகரித்து, 1,55,915-ஆக உள்ளது. அதேபோல, மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையும் 60 சதவீதம் சிறப்பான வளா்ச்சியைப் பதிவு செய்து, 18,407-லிருந்து 29,455 அலகுகளாக அதிகரித்துள்ளதாக நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments