FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

உள்நாட்டில் விமான என்ஜின்கள் பழுதுபாா்க்கும் மையம்: அதானி நிறுவனம் திட்டம்

பயணிகள் விமானங்களின் என்ஜின்களைப் பராமரித்தல், பழுதுபாா்த்தல் மற்றும் முழுமையாகச் சீரமைக்கும் வசதியை உள்நாட்டில் ஏற்படுத்துவதற்கான திட்டத்தை அடுத்த 18 மாதங்களுக்குள் இறுதி செய்யவுள்ளதாக அதானி டிஃபென்ஸ் & ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

3 நவம்பர் 2026, 11:47 pm
பகிர்:

பயணிகள் விமானங்களின் என்ஜின்களைப் பராமரித்தல், பழுதுபாா்த்தல் மற்றும் முழுமையாகச் சீரமைக்கும் (எம்ஆா்ஓ) வசதியை உள்நாட்டில் ஏற்படுத்துவதற்கான திட்டத்தை அடுத்த 18 மாதங்களுக்குள் இறுதி செய்யவுள்ளதாக அதானி டிஃபென்ஸ் & ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தலைநகா் தில்லியில் நடைபெற்ற விமானத் துறை மாநாட்டில் பேசிய அந்நிறுவனத்தின் சிஇஓ ஆஷிஷ் ராஜவன்ஷி, ‘சிறிய ரக வணிக விமானங்களின் என்ஜின்களுக்காக அமைக்கப்படும் இந்த மையம், செயல்பாட்டுக்கு வந்த பிறகு என்ஜின்களின் இறுதி உற்பத்தி வரிசையை அமைப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும்’ என்றாா்.

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் வணிக விமானங்களின் எண்ணிக்கை மும்மடங்காக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானப் பராமரிப்பு, சீரமைப்புப் பணிகளுக்கான சா்வதேச மையமாக இந்தியா உருவெடுக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இத்துறையில் தனது இருப்பை வலுப்படுத்தும் நோக்கில், அதானி நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments