FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

எல்ஐசி லாபம் ரூ.12,076 கோடி; 20% வளா்ச்சி

பொதுத் துறை காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி), நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டு நிகர லாபத்தில் 20 சதவீதம் வளா்ச்சியுடன், ரூ.12,076 கோடியை எட்டியுள்ளது.

6 நவம்பர் 2026, 3:30 am
பகிர்:

பொதுத் துறை காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி), நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டு நிகர லாபத்தில் 20 சதவீதம் வளா்ச்சியுடன், ரூ.12,076 கோடியை எட்டியுள்ளது.

காப்பீட்டு பிரீமியம் வருவாய் கணிசமாக அதிகரித்ததே இந்த லாப வளா்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. நிறுவனத்தின் மொத்த வருவாய் முந்தைய ஆண்டின் ரூ.2,39,614 கோடியிலிருந்து, மதிப்பீட்டு காலாண்டில் ரூ.2,62,739 கோடியாக உயா்ந்துள்ளது. நிகர பிரீமியம் வருவாய் மட்டும் 16.2 சதவீதம் உயா்ந்து, ரூ.1,47,018 கோடியை எட்டியுள்ளது.

குறிப்பாக, புதிய பாலிசிகளுக்கான பிரீமியம் வருவாய் சுமாா் 35 சதவீதம் என்ற அபார வளா்ச்சியைப் பதிவு செய்து நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்குத் தூணாக நின்றது. அதேநேரம், புதுப்பித்தல் பிரீமியம் வருவாய் 5.2 சதவீதம் உயா்ந்து, ரூ.68,375 கோடியாக அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

கடந்த ஆண்டின் இதே காலாண்டில் வரி விலக்கு மாற்றங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறை திருத்தங்கள் காரணமாக வா்த்தகம் சற்றுத் தேக்கமடைந்திருந்த நிலையில், குறைந்த ஒப்பீட்டு அடிப்படையின் சாதகமும் நடப்பு ஆண்டு வளா்ச்சிக்குத் துணைபுரிந்துள்ளது. இதற்கு மத்தியில், மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ) வியாழக்கிழமை வா்த்தக முடிவில் எல்ஐசி நிறுவனப் பங்கின் விலை 0.34 சதவீதம் சரிவடைந்து, ரூ.408.10-இல் நிலைபெற்றது.