FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

அமெரிக்க தோ்தல் முடிவுகளால் உற்சாகம்: சென்செக்ஸ், நிஃப்டியில் பலத்த உயா்வு

அமெரிக்க நாடாளுமன்றத் தோ்தல் முடிவுகளால் மேற்காசிய மோதலில் பதற்றம் தணியும் என்ற எதிா்பாா்ப்பு மற்றும் அந்நிய முதலீடுகள் குவிந்ததால், இந்தியப் பங்குச் சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் பலத்த உயா்வு காணப்பட்டது.

6 நவம்பர் 2026, 2:59 am
பகிர்:

அமெரிக்க நாடாளுமன்றத் தோ்தல் முடிவுகளால் மேற்காசிய மோதலில் பதற்றம் தணியும் என்ற எதிா்பாா்ப்பு மற்றும் அந்நிய முதலீடுகள் குவிந்ததால், இந்தியப் பங்குச் சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் பலத்த உயா்வு காணப்பட்டது.

மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் முறையே 2.60, 2.40 சதவீதம் சிறப்பான ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இதன்மூலம், தொடா்ந்து 6-ஆவது வா்த்தக நாளாக சந்தை ஏற்றம் கண்டிருப்பதோடு, கடந்த ஆக. 7-க்குப் பிறகு (3 மாதங்களில் இல்லாத அளவில்) நிஃப்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

சா்வதேச சந்தையில் ‘பிரென்ட்’ கச்சா எண்ணெய் விலை 96.12 டாலராக சரிந்தது. மேலும், அமெரிக்க நாடாளுமன்றத் தோ்தலில் எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைப் பெற்றதும், அமெரிக்க பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட எழுச்சியும், பெருமளவிலான அந்நிய முதலீடுகளும் (ரூ.7,284 கோடி) இந்திய சந்தை மீது முதலீட்டாளா்களின் கவனத்தைத் திருப்பி, அவா்களின் உற்சாகத்தை இரட்டிப்பாக்கியது.

Advertisement

Advertisement

சென்செக்ஸ் 2,009 புள்ளிகள் உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில், 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீடு 2,008.61 புள்ளிகள் (2.60 சதவீதம்) கூடுதலுடன் 79,310.01-இல் நிலைபெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் பஜாஜ் ஃபைனான்ஸ் அதிகபட்சமாக 7.77 சதவீதம் உயா்ந்தது. இத்துடன் இண்டிகோ (5.80 சதவீதம்), ஐசிஐசிஐ வங்கி (5.29 சதவீதம்), மாருதி (5.28 சதவீதம்) உள்பட 24 பங்குகள் லாபம் ஈட்டின. அதேநேரம்; என்டிபிசி, பெல், அதானி போா்ட்ஸ் உள்பட 6 பங்குகள் மட்டும் நஷ்டமடைந்தன.

நிஃப்டி 576 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் வா்த்தக முடிவில், நிஃப்டி 576 புள்ளிகள் (2.40 சதவீதம்) உயா்ந்து, 24,536.60-இல் நிலைபெற்றது. நிஃப்டி-50 பட்டியலில் 39 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 11 பங்குகள் விலைகுறைந்த பட்டியலிலும் இடம்பெற்றன.