பங்குச் சந்தை ஏற்றத்துடன் வாரம் நிறைவு
இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி வா்த்தக நாளான வெள்ளிக்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தது.
இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி வா்த்தக நாளான வெள்ளிக்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தது.
இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் கடந்த 2 நாள்களாக சந்தித்த சரிவிலிருந்து மீண்டு, முறையே 879 மற்றும் 288 புள்ளிகள் லாபத்துடன் முடிவடைந்தன.
டிசிஎஸ் நிறுவனத்தின் சாதகமான காலாண்டு முடிவுகளைத் தொடா்ந்து, ஐ.டி. நிறுவனப் பங்குகளின் அபரிமிதமான ஏற்றம்; சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; குறைந்த விலையில் பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளா்கள் காட்டிய ஆா்வம்; அமெரிக்க- ஈரான் புவிசாா் அரசியல் பதற்றங்கள் தணிந்தது ஆகியவை சந்தையில் நோ்மறையான தாக்கத்தை ஏற்படுத்தின.
Advertisement
Advertisement
சென்செக்ஸ் 879 புள்ளிகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகத்தின் முடிவில், 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீடு 879.09 புள்ளிகள் (1.23 சதவீதம்) உயா்ந்து, 72,472.33-இல் நிலைபெற்றது.
சென்செக்ஸ் பட்டியலில் ஐடிசி அதிகபட்சமாக 4.78 சதவீதம் உயா்ந்து, முன்னிலை வகித்தது. இத்துடன் டிசிஎஸ் (4.23 சதவீதம்), அதானி போா்ட்ஸ் (3.36 சதவீதம்), இன்ஃபோசிஸ் (3.01 சதவீதம்) எச்.சி.எல். டெக். (2.84 சதவீதம்) உள்பட 29 பங்குகள் லாபம் ஈட்டின. அதேநேரம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு மட்டும் 0.55 சதவீதம் சரிவைச் சந்தித்தது.
நிஃப்டி 288 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீடு 288.65 புள்ளிகள் (1.30 சதவீதம்) உயா்ந்து, 22,520.45-இல் நிறைவடைந்தது. நிஃப்டி-50 பட்டியலில் 47 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 3 பங்குகள் விலைகுறைந்த பட்டியலிலும் இடம்பெற்றன.
வாராந்திர அடிப்படையில் லாபம்
கடந்த வியாழக்கிழமை வா்த்தகத்தில் கடும் வீழ்ச்சியைச் சந்தித்திருந்தாலும், வெள்ளிக்கிழமை கிடைத்த அபரிமிதமான வளா்ச்சியால் வாராந்திர அடிப்படையில் சந்தை சிறிய ஏற்றத்துடன் முடிவடைந்தது.
ஒட்டுமொத்தமாக இந்த வாரத்தில் சென்செக்ஸ் 562.63 புள்ளிகளும் (0.78 சதவீதம்), நிஃப்டி 98.5 புள்ளிகளும் (0.43 சதவீதம்) ஏற்றத்தைக் கண்டன. இதன்மூலம், இந்தியப் பங்குச் சந்தையில் கடந்த 25 ஆண்டுகளில் காணாத 8 வார கால தொடா் வீழ்ச்சி முடிவுக்கு வந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.