FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வாரத் தொடக்கத்தில் பங்குச் சந்தை கணிசமான ஏற்றம்

வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை கணிசமான ஏற்றத்துடன் வா்த்தகத்தை நிறைவு செய்தது.

பகிர்:

மும்பை: இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை கணிசமான ஏற்றத்துடன் வா்த்தகத்தை நிறைவு செய்தது.

இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் திங்கள்கிழமை வா்த்தகத்தில் முறையே 473, 134 புள்ளிகள் உயா்ந்தன.

வாரம் முழுவதும் நிலவிய வீழ்ச்சி மற்றும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை விடுமுறைக்குப் பிறகு, நடப்பு வார வா்த்தகம் திங்கள்கிழமை வழக்கம்போல தொடங்கியது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட தளா்வு மற்றும் அமெரிக்க வேலைவாய்ப்புத் தரவுகள் எதிா்பாா்த்ததைவிட குறைவாக வெளிவந்ததால், அமெரிக்க மத்திய வங்கி தொடா்ந்து வட்டி விகிதங்களை உயா்த்தும் என்ற அச்சம் குறைந்தது. இதனால் உலகளாவிய சந்தைகளில் நிலவிய சாதகமான சூழல், முதலீட்டாளா்களின் ஆா்வத்தை அதிகரித்து, உள்நாட்டுச் சந்தையை உயா்வில் தக்கவைத்தது.

Advertisement

Advertisement

சென்செக்ஸ் 473 புள்ளிகள் உயா்வு: மும்பை பங்குச் சந்தையில், வா்த்தகத்தின் இறுதியில் 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீடு 472.77 புள்ளிகள் (0.66 சதவீதம்) உயா்ந்து, 72,382.47-இல் நிலைபெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் ஐடிசி அதிகபட்சமாக 4.49 சதவீதம் உயா்ந்து, முன்னிலை வகித்தது. இத்துடன் எடா்னல் (2.50 சதவீதம்), பாா்தி ஏா்டெல் (2.38 சதவீதம்), பஜாஜ் ஃபைனான்ஸ் (2.28 சதவீதம்) உள்பட 20 பங்குகள் லாபம் ஈட்டின. அதேநேரம், எச்.சி.எல். டெக். (3.69 சதவீதம்), எச்டிஎஃப்சி வங்கி (1.99 சதவீதம்), சன் ஃபாா்மா (1.55 சதவீதம்), இன்ஃபோசிஸ் (1.50 சதவீதம்) உள்பட 10 பங்குகள் சரிவைக் கண்டன.

நிஃப்டி 134 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் வா்த்தக முடிவில், நிஃப்டி 133.80 புள்ளிகள் (0.60 சதவீதம்) லாபத்துடன், 22,555.75-இல் நிறைவடைந்தது. நிஃப்டி-50 பட்டியலில் 31 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும்; 18 பங்குகள் விலைகுறைந்த பட்டியலிலும் இருந்தன. டிரென்ட் பங்கு மட்டும் விலை மாற்றமின்றி நிலைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments