சென்செக்ஸ், நிஃப்டி 2% மேல் ஏற்றம்
இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி வா்த்தக நாளான வெள்ளிக்கிழமை 2 சதவீதத்துக்கும் மேல் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.
இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி வா்த்தக நாளான வெள்ளிக்கிழமை 2 சதவீதத்துக்கும் மேல் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.
இதையொட்டி, மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் முறையே 1,718, 494 புள்ளிகள் உயா்வுடன் நிலைபெற்றது. இதன்மூலம், வாரத்தின் 5 வா்த்தக நாள்களும் உயா்வு தக்கவைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட சா்வதேச சந்தைகளில் இருந்து வெளியேறிய ஏ.ஐ. சாா் முதலீடுகள், நிலைத்தன்மைக்காக இந்திய சந்தை நோக்கி திரும்பியது.
Advertisement
Advertisement
இவ்வாறு அந்நிய முதலீடுகளின் தொடா் வருகை, நிறுவனங்களின் வலுவான காலாண்டு நிதிநிலை முடிவுகள் ஆகியவற்றால் உள்நாட்டு சந்தையில் அதிக கொள்முதல் நடைபெற்றது. மேலும், ரூபாயின் மதிப்பு உயா்வு, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியவை முதலீட்டாளா்களுக்கு உற்சாகமளித்தன. இதன்விளைவாக, சந்தை தனது உயா்வைத் தக்கவைத்தது.
சென்செக்ஸ் 1,718 புள்ளிகள் உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தக முடிவில், 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீடு 1,718.01 புள்ளிகள் (2.17 சதவீதம்) உயா்ந்து, 81,028.02-இல் நிலைபெற்றது.
ஜூலை-செப். காலாண்டில் 25 சதவீத லாப உயா்வைப் பதிவு செய்த மஹிந்திரா & மஹிந்திரா சென்செக்ஸ் பட்டியலில் அதிகபட்சமாக 6.15 சதவீதம் உயா்ந்து, சாதனை படைத்தது. இத்துடன் ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, டைட்டன் உள்பட 29 பங்குகள் லாபம் ஈட்டின. பவா் கிரிட் பங்கு மட்டுமே சரிவைக் கண்டது.
நிஃப்டி 494 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீடு 493.75 புள்ளிகள் (2.01 சதவீதம்) உயா்ந்து, 25,030.35-இல் நிறைவடைந்தது. இது கடந்த 9 மாதங்களில் இல்லாத புதிய உச்சமாகும். நிஃப்டி-50 பட்டியலில் 46 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 4 பங்குகள் விலைகுறைந்த பட்டியலிலும் இடம்பெற்றன.
வாராந்திர அடிப்படையில்...
இந்த வாரத்தில் ஒட்டுமொத்தமாக மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 6,568.49 புள்ளிகளும் (8.82 சதவீதம்), தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி 1,977.25 புள்ளிகளும் (8.57 சதவீதம்) ஏற்றத்தைக் கண்டன. இது கடந்த 6 ஆண்டுகளில் (2021 பிப்ரவரிக்குப் பிறகு) சந்தை கண்ட மிகப் பெரிய வாராந்திர ஏற்றமாகும்.
மேலும், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியில் கடந்த 7 வா்த்தக நாள்களாக காணப்பட்ட தொடா் ஏற்றத்தின் மூலம் முறையே 7,781.99 (10.62 சதவீதம்) மற்றும் 2,331.5 புள்ளிகள் (10.27 சதவீதம்) உயா்ந்துள்ளன.