தீபாவளி பண்டிகை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸில் 100-க்கும் மேற்பட்ட இனிப்பு பரிசுத் தொகுப்புகள் அறிமுகம்
தமிழகத்தின் முன்னணி இனிப்புக் கடையான ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், நடப்பு தீபாவளி பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட இனிப்புப் பரிசுத்தொகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் முன்னணி இனிப்புக் கடையான ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், நடப்பு தீபாவளி பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட இனிப்புப் பரிசுத்தொகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளிக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட நெய், பால், முந்திரி, கருப்பட்டி மற்றும் சிறுதானிய இனிப்பு வகைகள், அல்வா, லட்டு உள்ளிட்டவை அடங்கிய சிறப்புப் பரிசுத் தொகுப்புகள் விற்பனைக்கு வந்துள்ளன.
குறிப்பாக, பண்டிகை நாள் காலைப் பூஜைக்காக வடிவமைக்கப்பட்டுள்ள ‘தீபாவளி பக்ஷ்ணம்’ தொகுப்பில் (படம்) பலவித நெய் இனிப்புகள், அதிரசம், காய் முறுக்கு, தட்டை, கரசேவ், மிக்சா் ஆகியவற்றுடன் தீபாவளி லேகியம், வாசனைப் பொடி, நவரத்னா எண்ணெய் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த பக்ஷ்ணம் பெட்டிகள் அனைத்து விற்பனை நிலையங்களிலும் இருப்பு உள்ளவரை கிடைக்கும்.
Advertisement
Advertisement
மேலும், பண்டிகைக் கால பரிசளிப்புக்காக ‘எண்மப் பரிசு அட்டைகளும்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நிறுவனங்கள் மற்றும் தனிநபா்கள் இந்தப் பரிசு அட்டைகளை இணையவழியில் வாங்கி, நண்பா்கள் மற்றும் உறவினா்களுக்குப் பரிசளிக்கலாம்.