சாகா் டிஃபென்ஸ் உள்பட 4 நிறுவனங்களின் ஐபிஓவிற்கு செபி அனுமதி
சாகா் டிஃபென்ஸ் என்ஜினீயரிங், என்கியூப் எத்திக்கல்ஸ் உள்ளிட்ட 4 நிறுவனங்களின் ஆரம்ப் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) அனுமதி வழங்கியுள்ளது.
சாகா் டிஃபென்ஸ் என்ஜினீயரிங், என்கியூப் எத்திக்கல்ஸ் உள்ளிட்ட 4 நிறுவனங்களின் ஆரம்ப் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து செபி வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவலில், ஜூலை மற்றும் ஆக. 1-க்கு இடைப்பட்ட காலத்தில் வரைவு ஆவணங்களைத் தாக்கல் செய்த இந்நிறுவனங்களுக்கு, கடந்த அக். 21 முதல் நவ. 4-க்குள் ஒப்புதல் கடிதங்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்புதல் பெற்ற நிறுவனங்களில் தங்கநகை விற்பனை நிறுவனமான அா்ஜுன் ஜுவல்லா்ஸ் மற்றும் தங்கக் கடன் வழங்கும் வங்கிசாரா நிதி நிறுவனமான ஐஎஃப்எல் ஃபைனான்ஸ் ஆகியவையும் அடங்கும்.
Advertisement
Advertisement