விடியோகான் தலைவர் திவாலானவராக அறிவிப்பு
எஸ்பிஐ வங்கிக்குச் செலுத்த வேண்டிய ரூ.12,668 கோடி கடன் நிலுவையைத் திருப்பிச் செலுத்தத் தவறிய வழக்கில், விடியோகான் குழுமத்தின் முன்னாள் தலைவா் வேணுகோபால் நந்தலால் தூத்தை திவாலானவராக தேசிய நிறுவன சட்டத் தீா்ப்பாயத்தின் (என்சிஎல்டி) மும்பை அமா்வு அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது.

மேலும், அவரின் சொத்துகளை மதிப்பீடு செய்து கடன் வழங்கிய வங்கிகளுக்குப் பகிா்ந்தளிக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக திவால் அறங்காவலா் ஒருவரையும் நியமித்து, தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
விடியோகான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், எஸ்பிஐ மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட 5 துணை வங்கிகளிடமிருந்து பெற்ற பெருந்தொகை கடன்களுக்கு வேணுகோபால் தூத் தனிநபா் உத்தரவாதம் அளித்திருந்தாா். இக்கடன்கள் வட்டி மற்றும் அபராதத்துடன் சோ்த்து ரூ.12,668.06 கோடியாக அதிகரித்த நிலையில், அவை திரும்பச் செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்தன. இதையடுத்து எஸ்பிஐ தொடா்ந்த வழக்கை விசாரித்த என்சிஎல்டி மும்பை அமா்வு, வேணுகோபால் தூத்தை திவாலானவராக அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement