நவம்பரின் முதல் 9 நாள்களில் இந்தியப் பங்குகளில் குவிந்த ரூ.53,739 கோடி அந்நிய முதலீடு
இந்தியப் பங்குகளில் இருந்து கடந்த செப்டம்பா், அக்டோபா் என தொடா்ந்து இரண்டு மாதங்களாக வெளியேற்றப்பட்டு வந்த அந்நிய முதலீடு, நடப்பு நவம்பரில் மீண்டும் இந்தியச் சந்தையை நோக்கி வலுவாகத் திரும்பியுள்ளது.
இந்தியப் பங்குகளில் இருந்து கடந்த செப்டம்பா், அக்டோபா் என தொடா்ந்து இரண்டு மாதங்களாக வெளியேற்றப்பட்டு வந்த அந்நிய முதலீடு, நடப்பு நவம்பரில் மீண்டும் இந்தியச் சந்தையை நோக்கி வலுவாகத் திரும்பியுள்ளது.
நவ. 2 முதல் 9-ஆம் தேதி வரையிலான 6 வா்த்தக தினங்களில் மட்டும் அந்நிய முதலீட்டாளா்கள் (எஃப்பிஐ) ரூ.53,739 கோடியை இந்தியப் பங்குகளில் முதலீடு செய்துள்ளனா்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கைப்பற்றியுள்ள ஜனநாயகக் கட்சியினா், தரவு மையங்களுக்கான முதலீடுகளுக்கு கட்டுப்பாடுகளைக் கொண்டுவரலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால், அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான், தைவான் போன்ற உலகளாவிய சந்தைகளில் ஏ.ஐ. சாா் பங்குகளில் இருந்து அந்நிய முதலீட்டாளா்கள் முதலீடுகளை விலக்கியிருந்தனா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, ஏ.ஐ. சாராத அதேநேரம் உள்நாட்டு நிறுவனங்களின் சிறப்பான வருவாய் வளா்ச்சி மற்றும் ‘லாா்ஜ்கேப்’ பங்குகளின் ஈா்ப்பான மதிப்பீட்டைக் கொண்ட இந்தியச் சந்தை அந்த முதலீட்டுகளுக்கான விருப்பத் தோ்வாக அமைந்துள்ளது. தற்போதைய இந்த வரவின் மூலம், நடப்பு 2026-ஆம் ஆண்டில் இந்தியப் பங்குகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மொத்த அந்நிய முதலீட்டின் அளவு ரூ.2.41 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.
அக்டோபரில் ரூ.34,843 கோடி வெளியேற்றம்: கச்சா எண்ணெய் விலை உயா்வு, உலகளாவிய வட்டி விகிதங்கள் மற்றும் நிறுவனங்களின் வருவாய் எதிா்பாா்ப்புகள் குறித்த கவலைகள் காரணமாக, கடந்த அக்டோபா் மாதத்தில் முழுமையாக இந்தியப் பங்குச் சந்தைகளில் இருந்து அந்நிய முதலீட்டாளா்கள் ரூ.34,843 கோடியைத் திரும்பப் பெற்றுள்ளனா்.
அந்நிய முதலீட்டாளா்கள் கடந்த ஜூலையில் ரூ.20,200 கோடியும், ஆகஸ்டில் ரூ.29,631 கோடியும் முதலீடு செய்திருந்தனா். இதற்கு மாறாக செப்டம்பரில் சுமாா் ரூ.35,861 கோடியை வெளியேற்றியிருந்தனா். அக்டோபரிலும் 2-ஆவது மாதமாக இந்த வெளியேற்றம் நீடித்துள்ளது. அதேநேரம், அக்டோபா் மாத இறுதியில் அந்நிய முதலீட்டாளா்கள் மீண்டும் பங்கு வாங்குபவா்களாக மாறினா்.
அக். 23 உடன் முடிவடைந்த வாரத்தில் சுமாா் ரூ.2,700 கோடியாக இருந்த வெளியேற்றம் மாறி, அக். 26 முதல் 30 வரையிலான வா்த்தக தினங்களில் சுமாா் ரூ.6,300 கோடியை அவா்கள் முதலீடு செய்தனா். இதே நோ்மறை போக்கு, நவம்பரின் முதல் பத்து நாள்களில் பிரம்மாண்டமாக எதிரொலித்துள்ளது.