FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

லித்தியம்-அயன் பேட்டரி மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்குத் தடை விதித்த இந்தியா!!

உள்நாட்டில் மறுசுழற்சி மற்றும் முக்கிய கனிமங்களை மீட்டெடுப்பதை வலுப்படுத்தும் நோக்கில், லித்தியம்-அயன் பேட்டரி பிளாக் மாஸ் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது.

52 வினாடிகள் முன்பு
Lithium-Ion Battery
பகிர்:

புதுதில்லி: உள்நாட்டில் மறுசுழற்சி மற்றும் முக்கிய கனிமங்களை மீட்டெடுப்பதை வலுப்படுத்தும் நோக்கில், லித்தியம்-அயன் பேட்டரி பிளாக் மாஸ் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது.

பிளாக் மாஸ் என்பது, பயன்பாட்டுக்கு உகாத லித்தியம்-அயன் பேட்டரிகள் மற்றும் பேட்டரி உற்பத்தி கழிவுகள் மூலம் பெறப்படும் தூள் போன்ற பொருளாகும். இதில் லித்தியம், கோபால்ட், நிக்கல் மற்றும் மாங்கனீசு உள்ளிட்ட முக்கிய கனிமங்கள், மீட்டெடுக்கக்கூடிய அளவில் உள்ளன.

Advertisement

Advertisement

இந்தியாவில் உருவாகும் கழிவுப் பொருட்களின் ஏற்றுமதிக்கு இந்த மதிப்புமிக்க வளத்தை வெளிநாடுகளுக்குத் திருப்பி விடுகிறது. அதே சமயம், உள்நாட்டு மறுசுழற்சியாளர்கள் சில சமயங்களில் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.

இந்தியாவில் உருவாகும் கழிவுப் பொருட்கள் நாட்டிலேயே மறுசுழற்சி செய்யப்பட்டு சுத்திகரிக்கப்படுவதை உறுதி செய்வதே இந்த ஏற்றுமதித் தடையின் முக்கிய நோக்கமாகும்.

இந்த நடவடிக்கை, உள்நாட்டு மறுசுழற்சி மற்றும் சுத்திகரிப்பு அலகுகளுக்கு மூலப்பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும், அவற்றின் திறன் பயன்பாட்டை மேம்படுத்தும், மேலும் இத்துறையில் கூடுதல் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும்.

summary

India has banned exports of lithium-ion battery black mass to strengthen domestic recycling and critical mineral recovery.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.