ஏ2பி உணவகத்தின் பங்குகளை ரூ. 1,600 கோடிக்கு வாங்கிய தொழிலதிபர் ஜேம்ஸ் முர்டோச்!
ஏ2பி உணவகத்தின் பெரும்பான்மையான பங்குகள் விற்பனை செய்யப்பட்டது பற்றி...
ஏ2பி என அழைக்கப்படும் அடையார் ஆனந்த பவனின் பெரும்பான்மையான பங்குகளை ரூ. 1,600 கோடிக்கு போதி ட்ரீ சிஸ்டம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
தமிழ்நாட்டின் உணவகத் துறையின் அடையாளங்களில் ஒன்றாகவும், தென்னிந்தியாவின் பிரபலமான சைவ உணவகமாக உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளை கொண்டுள்ளது ஏ2பி.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஏ2பி நிறுவனம் தனது பெரும்பான்மையான பங்குகளை அமெரிக்க - பிரிட்டன் பிரபல தொழிலதிபர் ஜேம்ஸ் முர்டோச்சுக்கு விற்பனை செய்துள்ளது. ஏ2பி நிறுவனத்தின் மொத்தம் மதிப்பான ரூ. 3,100 கோடியில், சுமார் ரூ. 1,600 கோடி (180 மில்லியன் அமெரிக்க டாலர்) பங்குகள் போதி ட்ரீ நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஏ2பி பங்குகள் விற்பனை செய்யப்பட்ட தொகையை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் புதிய கிளைகளை தொடங்கி விரிவுபடுத்தவும், உற்பத்தியை அதிகப்படுத்த சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள தொழிற்சாலைகளை நவீனமயமாக்கவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாகி தெரிவித்துள்ளார்.
ஜேம்ஸ் முர்டோச் யார்?
உலகப் புகழ்பெற்ற ஊடக அதிபரான ராபெர்ட் முர்டோச்சின் இளைய மகன் ஜேம்ஸ் முர்டோச். இந்திய ஊடகத் துறை முன்னோடியும், ஜியோ ஸ்டார் நிறுவனத்தின் துணைத் தலைவருமான உதய் சங்கருடன் இணைந்து ஜேம்ஸ் முர்டோச் உருவாக்கிய நிறுவனம்தான் போதி ட்ரீ சிஸ்டம்ஸ்.
முதலீட்டு நிறுவனமான போதி ட்ரீ சிஸ்டம்ஸ், ஏற்கெனவே ஜியோ ஸ்டார், ஆலன் கரியர் இன்ஸ்டிடியூட் உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடுகள் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.