வோடஃபோன் ஐடியா பங்குகள் 3% சரிவு!
வோடஃபோன் ஐடியா நிறுவன பங்குகள், நிகர நஷ்டம் ரூ. 5,975 கோடியாக அதிகரித்துள்ளதாக நிறுவனம் அறிவித்ததைத் தொடர்ந்து அதன் பங்குகள் 3 சதவீதத்திற்கும் மேல் சரிந்தன.
புதுதில்லி: தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியாவின் பங்குகள், 2வது காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர நஷ்டம் ரூ. 5,975 கோடியாக அதிகரித்துள்ளதாக நிறுவனம் அறிவித்ததைத் தொடர்ந்து அதன் பங்குகள் 3 சதவீதத்திற்கும் மேல் சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையில், வோடஃபோன் நிறுவனத்தின் பங்குகள் இன்று 3.16% சரிந்து ரூ. 12.57 ஆக நிலைபெற்றது. காலை நேர வர்த்தகத்தில் இந்த பங்கு 3.54% சரிந்து ரூ.12.51 ஆக இருந்தது.
Advertisement
Advertisement
நிஃப்டி-யில் இந்த பங்கு 3% சரிந்து ரூ. 12.51 ஆக முடிவடைந்தது.
வோடஃபோன் குழும நிறுவனம் ஐந்து ஆண்டுகள் காலத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த 328 கோடி பங்குகளின் மறுமதிப்பீடு காரணமாக ரூ.462 கோடி இழப்பை நிறுவனம் பதிவு செய்துள்ளது.
வோடஃபோன் ஐடியா நிதியாண்டின் 2வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர நஷ்டம் ரூ. 5,975 கோடியாக அதிகரித்துள்ளதாக அறிவித்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ. 5,524 கோடி நிகர நஷ்டத்தைப் பதிவு செய்திருந்தது.
வோடஃபோன் ஐடியாவின் செயல்பாட்டு வருவாய், நிதியாண்டின் 2வது காலாண்டில் ரூ. 11,195 கோடியிலிருந்து 6.2 சதவீதம் அதிகரித்து ரூ. 11,884 கோடியாக உயர்ந்தது.