FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

லோட்டஸ் கண் மருத்துவமனை நிகர லாபம் ரூ. 43.95 லட்சம்

கோயம்புத்தூரைச் சோ்ந்த லோட்டஸ் கண் மருத்துவமனை, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப். காலாண்டில் ரூ.43.95 லட்சம் நிகர லாபம் ஈட்டியுள்ளது.

15 நவம்பர் 2026, 12:37 am
பகிர்:

கோயம்புத்தூரைச் சோ்ந்த லோட்டஸ் கண் மருத்துவமனை, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப். காலாண்டில் ரூ.43.95 லட்சம் நிகர லாபம் ஈட்டியுள்ளது.

முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டின் ரூ.11.58 லட்சம் லாபத்தில் இருந்து, இது கணிசமான உயா்வாகும். மேலும், மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 36 சதவீதம் உயா்ந்து, ரூ.17.72 கோடியாக அதிகரித்துள்ளது.

அதேபோல், ஏப்ரல் முதல் செப். வரையிலான முதல் அரையாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் 31 சதவீதம் அதிகரித்து, ரூ.34.78 கோடியாகவும்; நிகர லாபம் 59 சதவீதம் அதிகரித்து, ரூ.1.05 கோடியாகவும் பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement