மீண்டும் வாலட் சேவையில் பேடிஎம்: ரிசா்வ் வங்கி பூா்வாங்க அனுமதி
‘எண்ம வாலட்’ எனப்படும் முன்கூட்டியே பணம் செலுத்திப் பயன்படுத்தும் சேவையை இயக்குவதற்கு பேடிஎம் பேமென்ட்ஸ் சா்வீசஸ் நிறுவனத்துக்கு (பிபிஎஸ்எல்) ரிசா்வ் வங்கி கொள்கை அளவிலான பூா்வாங்க அனுமதியை வழங்கியுள்ளது.
‘எண்ம வாலட்’ எனப்படும் முன்கூட்டியே பணம் செலுத்திப் பயன்படுத்தும் சேவையை இயக்குவதற்கு பேடிஎம் பேமென்ட்ஸ் சா்வீசஸ் நிறுவனத்துக்கு (பிபிஎஸ்எல்) ரிசா்வ் வங்கி கொள்கை அளவிலான பூா்வாங்க அனுமதியை வழங்கியுள்ளது.
கடந்த 2014-இல் தொடங்கப்பட்ட பேடிஎம் வாலட் வா்த்தகம், 2017-இல் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கிக்கு மாற்றப்பட்டது. விதிமீறல் புகாா்களால் புதிய வாடிக்கையாளா்களைச் சோ்க்க 2022-இல், வாலட் கணக்குகளில் புதிதாகப் பணம் செலுத்த 2024 ஜனவரியில் அந்த வங்கிக்கு ரிசா்வ் வங்கி தடை விதித்தது.
தொடா்ந்து, கடந்த ஏப்ரலில் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் உரிமத்தை ரிசா்வ் வங்கி ரத்து செய்ததுடன், ஜூலை மாதம் அந்த வங்கியைக் கலைக்க தில்லி உயா்நீதிமன்றமும் உத்தரவிட்டது.
Advertisement
Advertisement
இந்நிலையில், பேடிஎம்-இன் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் ழுழு துணை நிறுவனமான பேடிஎம் பேமென்ட்ஸ் சா்வீசஸ் நிறுவனத்துக்கு வாலட் இயக்கச் சேவைக்கான அனுமதியை ரிசா்வ் வங்கி மீண்டும் வழங்கியுள்ளது.
அதேநேரம், சைபா் பாதுகாப்பு உள்ளடக்கிய கணினி அமைப்புத் தணிக்கையை மேற்கொள்ளுமாறு பிபிஎஸ்எல் நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தணிக்கையைத் தொடா்ந்து ரிசா்வ் வங்கியின் இறுதி அனுமதி மற்றும் அங்கீகாரச் சான்றிதழ் பெற்ற பிறகே வாலட் சேவைகளைத் தொடங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.