FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வான்வெளி கட்டுப்பாடுகள் தளர்வு: அமெரிக்காவுக்கான நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்கிய ஏர் இந்தியா!

புதுதில்லி மற்றும் மும்பையிலிருந்து நியூயார்க் இடையிலான விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளது.

30 வினாடிகள் முன்பு
ஏர் இந்தியா விமானம் - கோப்புப்படம்
பகிர்:

புதுதில்லி: கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதுதில்லி மற்றும் மும்பையிலிருந்து நியூயார்க் இடையிலான விமான சேவையை ஏர் இந்தியா இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்த மாதத்தின் முதல் வாரத்திலிருந்து, A350-900 ரக விமானங்களைக் கொண்டு ஏர் இந்தியா இந்த நேரடி விமானங்களை இயக்கத் தொடங்கியுள்ளது. ஏர் இந்தியா, புதுதில்லியிலிருந்து நியூயார்க்கிற்கு தினமும் ஒரு விமான சேவையையும், நியூவார்க்கிற்கு வாரத்திற்கு நான்கு சேவைகளையும் இயக்குகிறது.

Advertisement

Advertisement

மும்பையிலிருந்து, போயிங் 777-300 ER ரக விமானங்களைக் கொண்டு நியூயார்க்கிற்கு தினமும் ஒரு சேவைகளையும், நியூவார்க்கிற்கு வாரத்திற்கு மூன்று விமான சேவைகளையும் இயக்குகிறது.

வான்வெளிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, தில்லி மற்றும் மும்பையிலிருந்து நியூயார்க், நெவார்க் நகரங்களுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானங்களின் பயண நேரம் தற்போது 17 மணி நேரமாக இருப்பதாக ஏர் இந்தியா தெரிவித்தது. இதற்கு முன் இத்தாலியின் ரோம் நகரில் எரிபொருள் நிரப்புவதற்காக விமானம் நிறுத்தம் செய்யப்பட்டதால், விமானங்களின் பயண நேரம் 22 மணி நேரமாக இருந்தது.

இந்த ஆண்டு, பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டதும், மத்திய கிழக்கின் சில பகுதிகளில் வான்வெளிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதும், இந்தியா மற்றும் வட அமெரிக்கா இடையிலான விமானப் போக்குவரத்தைப் பெரிதும் பாதித்தன.

தற்போது வான்வெளிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், இந்தியாவிலிருந்து நியூயார்க்கிற்கான நான்கு வழித்தடங்களிலும் விமான சேவையை மீண்டும் தொடங்கியுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு, விமானங்கள் ஜோர்டான் மற்றும் எகிப்து வழியாக நீண்ட சுற்றுப்பாதையில் இயக்கப்பட்டதால், பயண நேரம் அதிகரித்திருந்தது.

summary

Air India on Sunday said it has resumed non-stop flights to New York and Newark from Delhi and Mumbai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.